Saturday, November 18, 2006

30 நாள்... 30 பொங்கல்!

நவராத்திரி, தீபாவளிநோன்பு, பொங்கல் என்று
பண்டிகைகள் அணிவகுக்கும் மாதங்கள் இனி.
சுவாமிக்கு நைவேத்தியம் செய்வதற்கு ஆகட்டும்,
வருகின்றவர்களுக்குக் கொடுக்க பிரசாதத்துக்கு ஆகட்டும்...
பொங்கலை விட்டால் வேறு சிறந்த ஐட்டம் உண்டா?

குழையக் குழைய, நெய்யும் மிளகு சீரகமும் மணக்க,
முந்திரி மிதக்க பொங்கல் சாப்பிட யாருக்குத்தான் பிடிக்காது?
2 அல்லது 3 வகைப் பொங்கலையே மாற்றி மாற்றி செய்து அலுத்த உங்களுக்காக, அசத்தலான 30 வெரைட்டிகளை வழங்கியிருக்கிறார்
Ôசமையல் திலகம்Õ ரேவதி சண்முகம்.
நீங்களும் செய்து பாருங்கள்.உண்டு, பரிமாறி மகிழுங்கள்.


காராமணி பொங்கல்




தேவையானவை: பச்சரிசி \ 1 கப், காராமணி \ கால் கப், பால் \ 2 கப், தேங்காய்ப்பால் \ 2 கப், நெய் \ 3 டேபிள் ஸ்பூன், ஏலக்காய்தூள் \ அரை டீஸ்பூன்.

செய்முறை: காராமணியை வெறும் கடாயில் நன்கு வாசனை வரும் வரை வறுத்து, குக்கரில் ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து நன்கு வேகவிடுங்கள். அரிசியைக் கழுவி பால், ஒரு கப் தண்ணீர் சேர்த்து, குக்கரில் வையுங்கள். 2 விசில் வந்ததும் தீயைக் குறைத்து, பின் 5 நிமிடம் வைத்து இறக்குங்கள். வெல்லத்தை அரை கப் தண்ணீர் சேர்த்து கரையும் வரை கொதிக்கவிடுங்கள். வெல்லம் கரைந்ததும் வடிகட்டுங்கள். ஒரு பாத்திரத்தில் வெந்த சாதம், காராமணி, தேங்காய்ப்பால் சேர்த்து அடுப்பில் வைத்து, சற்று கெட்டியாகும் வரை கிளறி, வெல்லத் தண்ணீர், பாதியளவு நெய் சேர்த்து, எல்லாம் சேர்ந்து வரும் வரை கிளறுங்கள். கடைசியில், ஏலக்காய்தூள், மீதமுள்ள நெய் சேர்த்துக் கிளறினால் கமகமக்கும் காராமணி பொங்கல் தயார்.

பாகு பொங்கல்



தேவையானவை: பச்சரிசி \ 1 கப், பால் \ 1 கப், வெல்லம் \ 1 கப், நெய் \ 3 டேபிள்ஸ்பூன், முந்திரி \ 8, திராட்சை \ 12, ஏலக்காய்தூள் \ 1 டீஸ்பூன்.

செய்முறை: அரிசியை நன்கு கழுவி குக்கரில் 3 கப் தண்ணீர் சேர்த்து வையுங்கள். 2 விசில் வந்ததும் தீயைக் குறைத்து 5 நிமிடம் கழித்து இறக்குங்கள். வெல்லத்தை அரை கப் தண்ணீர் சேர்த்து கரையவிட்டு, வடிகட்டி பிறகு கொதிக்கவிடுங்கள்.

வெல்லம் நன்கு கொதித்ததும் வெந்த சாதம், பால் சேர்த்து நடுத்தர தீயில் வைத்துக் கிளறுங்கள். நன்கு சேர்ந்து வரும்பொழுது பாதியளவு நெய், ஏலக்காய்தூள் சேர்த்து கிளறி இறக்குங்கள். மீதமுள்ள நெய்யில் முந்திரி, திராட்சை வறுத்து சேருங்கள்


கன்டன்ஸ்ட்பால் பொங்கல்



தேவையானவை: பச்சரிசி \ 1 கப், கன்டன்ஸ்ட் பால் \ அரை டின், சர்க்கரை \ கால் கப், சீவிய பாதாம் \ 2 டீஸ்பூன், சீவிய முந்திரி \ 2 டீஸ்பூன், நெய் \ 3 டேபிள்ஸ்பூன், குங்குமப்பூ \ ஒரு சிட்டிகை, ஏலக்காய் தூள் \ அரை டீஸ்பூன்.

செய்முறை: பச்சரிசியை கழுவி 3 கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் வையுங்கள். ஒரு விசில் வந்ததும் தீயைக் குறைத்து, 5 நிமிடம் வேகவிட்டு இறக்குங்கள். விசில் சத்தம் அடங்கியதும் திறந்து சாதத்துடன் கன்டன்ஸ்ட் பால், சர்க்கரை, பாதியளவு நெய், குங்குமப்பூ சேர்த்து நன்கு கிளறுங்கள்.

சற்று சேர்ந்தாற்போல் வந்ததும் மீதியுள்ள நெய்யில் பாதாம், முந்திரி வறுத்து சேர்த்து, ஏலக்காய்தூள் சேர்த்து கிளறி இறக்குங்கள்.

பாசிப்பருப்பு பொங்கல்



தேவையானவை: பச்சரிசி \ 1 கப், பாசிப்பருப்பு \ அரை கப். பால் \ 2 கப், வெல்லம் \ 2 கப், நெய் \ கால் கப், முந்திரி \ 10, திராட்சை \ 15, ஏலக்காய்தூள் \ அரை டீஸ்பூன்,

செய்முறை: பாசிப்பருப்பை 1 டீஸ்பூன் நெய் சேர்த்து, சிறு தீயில் வாசனை வரும் வரை வறுத்தெடுங்கள். வறுத்த பருப்பை அரிசியுடன் சேர்த்து கழுவி குக்கரில் போட்டு 5 கப் தண்ணீர் சேர்த்து மூடி, 2 விசில் வந்ததும் தீயை குறைத்து 5 நிமிடம் கழித்து இறக்குங்கள். பிரஷர் அடங்கியதும் பால் சேர்த்து நன்கு கிளறுங்கள். வெல்லத்துடன் அரை கப் தண்ணீர் சேர்த்து கரையும் வரை கொதிக்கவிட்டு வடிகட்டவும். வடிகட்டிய வெல்லப்பாகை சாதத்துடன் சேர்த்து, நன்கு சேர்ந்து வரும்வரை கிளறி இறக்குங்கள். ஏலக்காய்தூள், நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து நன்கு கிளறுங்கள்.

சர்க்கரை பொங்கல்



தேவையானவை: பச்சரிசி \ 1 கப், பால் \ 4 கப், சர்க்கரை \ ஒன்றரை கப், நெய் \ 3 டேபிள்ஸ்பூன், தேங்காய் துருவல் \ கால் கப், முந்திரி \ 10, ஏலக்காய்தூள் \ அரை டீஸ்பூன்.

செய்முறை: அரிசியை நன்கு கழுவுங்கள். பாலுடன் 2 கப் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து, கொதி வரும்பொழுது அரிசியை சேர்த்து சிறு தீயில் குழைய வேகவிடுங்கள். நன்கு குழைந்து வெந்ததும், சர்க்கரை, தேங்காய் துருவல் இரண்டையும் சேருங்கள். சற்று சேர்ந்தாபோல வரும் போது, ஏலக்காய்தூள், பாதியளவு நெய் சேர்த்து கிளறுங்கள். மீதமுள்ள நெய்யில் சீவிய முந்திரியை வறுத்து சேர்த்து நன்கு கிளறுங்கள்.

(குறிப்பு: எப்போதுமே வெல்லம் அல்லது சர்க்கரை சேர்க்கும்போது,
சாதம் நன்கு வெந்து குழைந்தபிறகுதான் சேர்க்கவேண்டும்.
இல்லையென்றால், சாதம் விறைத்துக்கொண்டு வேகவே வேகாது.)


பால் பொங்கல்
தேவையானவை: பச்சரிசி \ 1 கப், பால் \ 1 லிட்டர், வெல்லம் \ 1 கப், நெய் \ 3 டேபிள்ஸ்பூன், முந்திரி \ 8, திராட்சை \ 12, ஏலக்காய்தூள் \ 1 டீஸ்பூன்.

செய்முறை: அரிசியை நன்கு கழுவுங்கள். பாலுடன் 1 கப் தண்ணீர் சேர்த்து காய்ச்சுங்கள். பால் பொங்கிவரும் சமயம், கழுவிய அரிசியை சேருங்கள். நடுத்தர தீயில் நன்கு வேகவிடுங்கள். பொடித்த வெல்லத்துடன் அரை கப் தண்ணீர் சேர்த்து வெல்லம் கரையும் வரை கொதிக்கவிட்டு வடிகட்டுங்கள்.

அரிசி நன்கு குழைய வெந்ததும் வெல்லப்பாகையும் பாதியளவு நெய்யையும் சேர்த்து கெட்டியாகும் வரை கிளறுங்கள். மீதமுள்ள நெய்யை காயவைத்து முந்திரி, திராட்சையை வறுத்து சேர்த்து, ஏலக்காய்தூளையும் சேர்த்து நன்கு கிளறி இறக்குங்கள்.

No comments: