Friday, December 1, 2006

30 வகை முட்டை சமையல்!

Issue date : 4-Aug-2006
இப்போது, பொதுவாக எல்லா டாக்டர்களுமே குழந்தைகளின் ஆரோக்கியம் குறித்து பெற்றோர்களுக்கு சொல்லும் அறிவுரை... ‘‘தினமும் முட்டை கொடுங்க!’’ என்பதுதான். குழந்தைகளுக்கு மட்டுமல்ல, எல்லா வயதினருக்கும் ஏற்ற சரிவிகித உணவு முட்டை என்பதுதான் அதன் ஸ்பெஷல்! அதோடு, சுலபமாக எல்லா இடங்களிலும் கிடைக்கக் கூடியது என்பதுடன், அதை சமைப்பதும் எளிதுதான்.

ஆனால், ‘நீங்க என்னதான் சொல்லுங்க... முட்டையை வேக வைச்சுக் கொடுக்கிறது, ஆம்லெட், ஆஃப் பாயில் மாதிரி சில அயிட்டங்கள் தவிர வேற என்னதான் செஞ்சு கொடுக்கிறது முட்டையில?’ என்று நீங்கள் கேட்பது புரிகிறது. அதற்காகவே, உங்களுக்கு ‘மினி பிரியாணி மேளா’ மூலம் நன்கு அறிமுகமான கலைச்செல்வி சொக்கலிங்கம், பிரமாதமான 30 ரெசிபிகளை வழங்கி இருக்கிறார்.

எல்லாமே மிக எளிமையான செய்முறைகள்தான். எனவே முட்டைகளை வாங்கி, விதம் விதமாக, ருசி ருசியாக செய்து கொடுத்து, வீட்டில் எல்லோரிட மும் ஒரு பெரிய ‘சபாஷ்!’ பெறுங்கள்!

முட்டை மசாலா டோஸ்ட்


தேவையானவை: முட்டை & 4, பிரெட் & 5, கரம் மசாலாதூள் & கால் டீஸ்பூன், மிளகாய்தூள் & அரை டீஸ்பூன், இஞ்சி&பூண்டு விழுது & அரை டீஸ்பூன், உப்பு & கால் டீஸ்பூன், மஞ்சள்தூள் & ஒரு சிட்டிகை, (விருப்பப்பட்டால்) பூண்டு & 2 பல், சின்ன வெங்காயம் & 4 சேர்த்து அரைத்த விழுது & சிறிதளவு.

செய்முறை: பிரெட் தவிர, மீதி எல்லாவற்றையும் முட்டையோடு சேர்த்து நன்கு அடித்து, கலந்துகொள்ளுங்கள். பிரெட்டை அதில் நனைத்து, தோசைக்கல்லில் போட்டு, சுற்றிலும் எண்ணெய் ஊற்றி வேகவிட்டெடுங்கள். மசாலா வாசனை மணக்கும் இந்த டோஸ்ட்டை செய்வது சுலபம்.. சுவையும் அதிகம்.

முட்டை இடியாப்பம் மசாலா



தேவையானவை: இடியாப்பம் (உதிர்த்தது) & 2 கப், முட்டை & 3, சின்ன வெங்காயம் & 10, நாட்டு தக்காளி & 3, பூண்டு & 6 பல், மிளகாய்தூள் & ஒரு டீஸ்பூன், உப்பு & அரை டீஸ்பூன், எண்ணெய் & தேவையான அளவு.

செய்முறை: ஒரு பாத்திரத்தில் துளி உப்பு போட்டு, அதோடு முட்டையை உடைத்து ஊற்றி நன்கு அடித்து வைத்துக்கொள்ளுங்கள். அதை கனமான அடையாக ஊற்றி, சின்னச் சின்ன துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளுங்கள். தக்காளி, வெங்காயம், பூண்டு, மிளகாய்தூள் (விரும்பினால் கால் டீஸ்பூன் கரம் மசாலாதூள் சேர்த்து), எல்லாவற்றையும் மிக்ஸியில் நைஸாக அரைத்தெடுங்கள்.

கடாயில் எண்ணெயை ஊற்றி, அரைத்த மசாலாவை அதில் போட்டு நன்கு வதக்குங்கள். நன்கு எண்ணெய் கசிந்து வரும்போது, உதிர்த்த இடியாப்பத்தையும் நறுக்கிய முட்டை துண்டுகளையும் போட்டு, சுருளச் சுருளக் கிளறி இறக்குங்கள். விருந்துகளில் வைத்துப் பாருங்கள். விசாரணைகள் தூள் பறக்கும்!

முட்டை & வெஜ் ஆம்லெட்



தேவையானவை: முட்டை & 6, முட்டைகோஸ், குடமிளகாய், காலிஃப்ளவர் (மூன்றும் பொடியாக நறுக்கியது) & ஒரு கப், பெரிய வெங்காயம் & 1, பச்சை மிளகாய் & 3, கறிவேப்பிலை & ஒரு ஆர்க்கு, உப்பு & சுவைக்கேற்ப, எண்ணெய் & தேவையான அளவு, மஞ்சள்தூள் & கால் டீஸ்பூன்.

செய்முறை: வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றைப் பொடியாக நறுக்குங்கள். முட்டையை உடைத்து ஊற்றி, மஞ்சள்தூள், உப்பு போட்டு நன்கு அடித்துக்கொள்ளுங்கள். கடாயில் எண்ணெய் ஊற்றி, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை மற்றும் காய்கறிகளைப் போட்டு நன்கு வதக்கி, ஆறவிடுங்கள். ஆறியதும் முட்டை கலவையில் கொட்டிக் கலந்து, தோசைக்கல்லில் சிறு சிறு அடைகளாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய் ஊற்றி வேகவிட்டெடுத்து சுடச் சுடப் பரிமாறுங்கள்.

குறிப்பு: முட்டையில் மஞ்சள்தூள், உப்பு சேர்த்து, அடித்துக் கலக்கும்போது எப்படி அடித்தாலும் மஞ்சள்தூள் சிறு சிறு கட்டிகளாக நிற்கும். இதைத் தவிர்க்க, பாத்திரத்தில் முதலில் தேவையான மஞ்சள்தூள், உப்பு போட்டு சிறிது தண்ணீர் விட்டுக் கரைத்துவிட்டு, அதன் பிறகு முட்டையை உடைத்து ஊற்றிக் கலக்கினால், உப்பு, மஞ்சள்தூள் கட்டியாகாமல் சீராகக் கரையும்.

ஈரமில்லாத பாத்திரத்தில் ஊற்றி அடித்தால், முட்டை நன்கு நுரைத்து வரும்.

முட்டை & காலிஃப்ளவர் ஆம்லெட்



தேவையானவை: முட்டை & 5, காலிஃப்ளவர் & 1, பெரிய வெங்காயம் & 1, பச்சை மிளகாய் & 2, பொட்டுக்கடலை மாவு & 3 டீஸ்பூன், மிளகுதூள் & அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் & கால் டீஸ்பூன், உப்பு & சுவைக்கேற்ப, எண்ணெய் & தேவையான அளவு.

செய்முறை: காலிஃப்ளவரை துண்டுகளாக்கி, உப்பு கலந்த தண்ணீரில் போட்டு சுத்தம் செயுங்கள். தண்டுகளே இல்லாமல், மேலிருக்கும் வெண்மையான பூக்களை மட்டும் உதிர்த்துக் கொள்ளுங்கள். வெங்காயம், பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். மிளகுதூள், பொட்டுக்கடலை மாவு, மஞ்சள்தூள், உப்பு இவற்றுடன் 2 டீஸ்பூன் தண்ணீர் ஊற்றி கலந்து கொள்ளுங்கள். முட்டை களை உடைத்து அதில் ஊற்றி, நன்கு அடித்துக் கொள்ளுங்கள். நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், காலி ஃப்ளவர் போட்டுக் கலந்து கொள் ளுங்கள். சிறிய ஆம்லெட்டு களாக ஊற்றியெடுத்துப் பரிமாறுங்கள்.

முட்டை & பிரெட் டோஸ்ட்


தேவையானவை: ஸ்வீட் பிரெட் & 6 ஸ்லைஸ், முட்டை & 4, பால் & ஒரு கப், சர்க்கரை & கால் கப் (இனிப்புச்சுவை அதிகம் வேண்டும் என்பவர்கள், சர்க்கரையின் அளவைக் கூட்டிக்கொள்ளலாம்), நெய் & கால் கப்.

செய்முறை: காய்ச்சிய பால், முட்டை, சர்க்கரை மூன்றையும் சேர்த்து நன்கு அடித்துக்கொள்ளுங்கள். (கவனிக்கவும்: பால் நன்கு ஆறியிருக்கவேண்டும். சூடாக இருந்தால், முட்டை அந்த சூட்டுக்கு வெந்துவிடும்). தோசைக்கல்லைக் காயவைத்து, சிறிது நெய் தடவி, ஒரு பிரெட்டை எடுத்து, முட்டை கலவையில் நனைத்தெடுத்து கல்லில் போட்டு, சுற்றிலும் நெய் ஊற்றி திருப்பிப்போட்டு எடுத்துப் பரிமாறுங்கள்.

முட்டை கொத்து பரோட்டா



தேவையானவை: முட்டை & 3, பெரிய வெங்காயம் & 2, தக்காளி & 2, கரம் மசாலாதூள் & அரை டீஸ்பூன், மிளகாய்தூள் & அரை டீஸ்பூன், தனியாதூள் & கால் டீஸ்பூன், மஞ்சள்தூள் & ஒரு சிட்டிகை, உப்பு & கால் டீஸ்பூன், பரோட்டா & 3, பொடியாக நறுக்கிய மல்லித்தழை & 3 டீஸ்பூன், கறிவேப்பிலை & ஒரு ஆர்க்கு, எண்ணெய் & தேவையான அளவு.

செய்முறை: பரோட்டாவை பொடிப் பொடியாக நறுக்குங்கள். வெங்காயம், தக்காளியையும் பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள். முட்டையை உடைத்து ஊற்றி, நன்கு அடித்துக்கொள்ளுங்கள். ஒரு கடாயில் நன்கு எண்ணெய் விட்டு, வெங்காயம் போட்டு வதக்குங்கள். வதங்கிக் கொண்டிருக்கும்போதே, கரம் மசாலாதூள், மிளகாய்தூள், தனியாதூள், உப்பு எல்லாவற்றையும் சேர்த்துக் கிளறி, தக்காளியையும் போட்டுக் கிளறுங்கள். ஒரு கிளறு கிளறியபின், பரோட்டா துண்டுகளையும் போட்டுக் கிளறவேண்டும். பரோட்டா நன்கு சூடானதும், அடுப்பை ஸிம்மில் வைத்து, தோசைக்கரண்டியால் கொத்திக் கொத்திக் கிளறவேண்டும்.

பிறகு, அடித்து வைத்திருக்கும் முட்டையையும் பரவலாக ஊற்றி, நன்கு கொத்திக் கொத்திக் கிளறுங்கள். தக்காளி சேர்ந்திருப்பதால், ஓரளவுதான் உதிரும். நன்கு கிளறி, மல்லித்தழை தூவி, இறக்குங்கள். காரம் வேண்டு மென்றால், மிளகுதூள் தூவிக் கிளறிப் பரிமாறுங்கள். ஆனியன் ராய்த்தா, இதற்கு சூப்பர் காம்பினேஷன்.

முட்டை & உருளை -சாப்ஸ்



தேவையானவை: முட்டை & 3, உருளைக்கிழங்கு (பெரியது) & 2, மிளகு & ஒரு டீஸ்பூன், சீரகம் & கால் டீஸ்பூன், பட்டை & 1, சோம்பு & கால் டீஸ்பூன், இஞ்சி & ஒரு துண்டு, பூண்டு & 6 பல், ரஸ்க் தூள் & 4 டீஸ்பூன், உப்பு & சுவைக்கேற்ப, மஞ்சள்தூள் & சிறிதளவு, எண்ணெய் & தேவையான அளவு.

செய்முறை: உருளைக்கிழங்கை மண் போகக் கழுவி, விரல் நீளத்துக்கு நறுக்கிக்கொள்ளுங்கள். கொடுத்துள்ள பொருட்களில், மிளகு முதல் பூண்டு வரையிலான பொருட்களை நன்கு அரைத்து மசாலா தயாரித்துக்கொள்ளுங்கள். இந்த மசாலாவை உருளைக்கிழங்குடன் சேர்த்துப் பிசறி ஒரு பாத்திரத்தில் போட்டு, லேசாக தண்ணீர் தெளித்து, குலுக்கி குலுக்கிவிட்டு வேகவிடுங்கள்.

ஒரு கிண்ணத்தில் தேவையான உப்பு, சிறிது மஞ்சள்தூள் போட்டுக் கரைத்து, முட்டையை உடைத்து ஊற்றி நன்கு அடித்துவைத்துக்கொள்ளுங்கள். மசாலாவுடன் சேர்ந்து வெந்த உருளைக்கிழங்கு துண்டுகளை, முட்டையில் நனைத்து, ரஸ்க் தூளில் போட்டுப் புரட்டி, எண்ணெயைக் காயவைத்துப் பொரித்தெடுங்கள். குழந்தைகளின் வோட்டுகளை அள்ளும் சூப்பர் சாப்ஸ் இது. விருந்துகளுக்கு ‘கிராண்டா’ன அயிட்டம்!

மலபார் முட்டை தொக்கு


தேவையானவை: முட்டை & 3, சின்ன வெங்காயம் & 15, காய்ந்த மிளகாய் & 10, தேங்காய் எண்ணெய் & 3 டேபிள்ஸ்பூன், உப்பு & அரை டீஸ்பூன்.

செய்முறை: முட்டையை உப்பு போட்டு வேகவைத்துக்கொள்ளுங்கள். வெங்காயம், உப்பு, காய்ந்த மிளகாய் ஆகிய மூன்றையும் நைஸாக அரைத்தெடுங்கள். ஒரு கடாயில் தேங்காய் எண்ணெயை ஊற்றி, அரைத்த மசாலாவை சுருளச் சுருள வதக்குங்கள். வேகவைத்த முட்டையை மேலும், கீழும் கீறிவிட்டு, மசாலாவில் போட்டுக் கிளறுங்கள். முட்டையில் மசாலா நன்கு சார்ந்ததும் இறக்குங்கள்.

இந்த கேரள ஸ்டைல் தொக்கு, தயிர் சாதத்துக்கு ஏ&ஒன் சைட்&டிஷ்.

முட்டை தொக்கு



தேவையானவை: முட்டை & 4, பெரிய வெங்காயம் & 2, நாட்டு தக்காளி & 3, பூண்டு & 6 பல், மிளகாய்தூள் & முக்கால் டீஸ்பூன், தனியா தூள் & கால் டீஸ்பூன், மஞ்சள்தூள் & கால் டீஸ்பூன், உப்பு & அரை டீஸ்பூன், மல்லித்தழை, கறிவேப்பிலை & தலா சிறிதளவு.

செய்முறை: முட்டையை சிறிது உப்பு சேர்த்து வேகவையுங்கள். தக்காளி, வெங்காயம், பூண்டு ஆகியவற்றை நறுக்கிக் கொள்ளுங்கள். கடாயில் எண்ணெய் ஊற்றி, விரும்பினால் சிறிது சோம்பு போட்டு தாளித்து, வெங்காயம், தக்காளி, பூண்டு, கறிவேப்பிலை போட்டு வதக்குங்கள். மஞ்சள்தூள், மிளகாய்தூள், தனியாதூள், உப்பு சேர்த்து நன்கு வதக்குங்கள். சிறிதளவு தண்ணீர் ஊற்றி, எல்லாம் சேர்ந்து ‘தளதள’வென வரும்போது, முட்டையை மேலும் கீழும் கீறி, மசாலாவில் போட்டு நன்கு கிளறி, மல்லித்தழை தூவி இறக்குங்கள்.

சாதம், சப்பாத்தி, பூரிக்கு தொட்டுக்கொள்ள பிரமாதமான சைட்&டிஷ்.

ஸ்பெஷல் முட்டை தொக்கு



தேவையானவை: முட்டை & 4, சின்ன வெங்காயம் & 10, மிளகு & 3 டீஸ்பூன், சோம்பு & அரை டீஸ்பூன், பூண்டு & 10 பல், மஞ்சள்தூள் & கால் டீஸ்பூன், (விருப்பப்பட்டால்) பட்டை & 1, உப்பு & அரை டீஸ்பூன், எண்ணெய் & 3 டீஸ்பூன், கறிவேப்பிலை, மல்லித்தழை & தலா சிறிதளவு.

செய்முறை: முட்டையை உப்பு சேர்த்து வேகவையுங்கள். மிளகு, சோம்பு, பூண்டு, சின்ன வெங்காயம், பட்டை, மஞ்சள்தூள் சேர்த்து அரைத் தெடுங்கள்.

கடாயில் எண்ணெய் ஊற்றி, கறிவேப்பிலை போட்டு, அரைத்த மசாலாவையும் போட்டு வதக்குங்கள். பச்சை வாசனை போனதும், முட்டையை இரண்டாக வகுந்து, அதில் போட்டு கிளறி, மல்லித்தழை தூவி இறக்குங்கள்.


முட்டை தோசை



தேவையானவை: தோசைமாவு & ஒரு கப், முட்டை & 2, மிளகு&சீரகத்தூள் & ஒரு டீஸ்பூன், பால் & ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் & கால் டீஸ்பூன், உப்பு & கால் டீஸ்பூன், எண்ணெய் & 2 டீஸ்பூன்.

செய்முறை: ஈரமில்லாத ஒரு பாத்திரத்தில் முட்டையை ஊற்றி, (உப்பு சேர்க்காமல்) நன்கு நுரை வரும்வரை அடித்துக்கொள்ளுங்கள். அதில் மிளகு&சீரகத் தூள், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து, மீண்டும் நன்கு அடித்து வையுங்கள். தோசைக்கல்லைக் காயவைத்து, மாவை மெல்லிய தோசையாக ஊற்றுங்கள். அடித்துவைத்திருக்கும் முட்டைக் கலவையில், பாதியை தோசையின் மேல் ஊற்றி, தோசைக்கல்லைக் கைகளில் எடுத்து வட்ட வடிவில் சுற்றவேண்டும் (ஆப்பச் சட்டியை சுற்றுவது போல). முட்டை அப்படியே தோசையின் மேல் பரவி, கல்லின் சூட்டுக்கு நன்கு வெந்துவிடும். சுற்றிலும் எண்ணெய் விட்டு, திருப்பிப் போட்டு எடுங்கள்.

பூண்டுத் துவையலை, இந்த முட்டை தோசையின் மேல் பரவலாகத் தடவி, சுருட்டி, ‘தோசை ரோல்’ ஆக செய்து சாப்பிட்டால், அந்த ருசியே அலாதி!

சீஸ் குடமிளகாய் ஆம்லெட்



தேவையானவை: முட்டை & 3, குடமிளகாய் & 1, முட்டைகோஸ் & 100 கிராம், (விருப்பப்பட்டால்) பொடியாக நறுக்கிய கேரட், காலிஃப்ளவர் & அரை கப், பெரிய வெங்காயம் & 1, பச்சை மிளகாய் & 3, பொடியாக நறுக்கிய மல்லித்தழை & 2 டீஸ்பூன், சீஸ் & ஒரு சிறு கட்டி, எண்ணெய் & தேவையான அளவு, மஞ்சள்தூள் & ஒரு சிட்டிகை, உப்பு & சுவைக்கேற்ப.

செய்முறை: முட்டையை நன்கு அடித்து வைத்துக்கொள்ளுங்கள். வெங்காயம், பச்சை மிளகாய், குடமிளகாய், கோஸ் எல்லாவற்றையும் பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள். காய்கறிக் கலவையுடன் மஞ்சள்தூள், உப்பு சேர்த்து கலந்துவைத்துக்கொள்ளுங்கள். அடித்து வைத்திருக்கும் முட்டையில், நறுக்கிய காய்கறிகளைக் கலந்து வைத்துக்கொள்ளுங்கள். சீஸைத் துருவிக்கொள்ளுங்கள்.

தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றி, முட்டை, காய்கறிக் கலவையை சிறு அடைகளாக ஊற்றி, மேலே துருவிய சீஸைப் பரவலாகத் தூவி, வெந்ததும் திருப்பிப் போட்டு வேகவிடுங்கள். விருப்பப்பட்டால், மிளகுதூள் தூவிப் பரிமாறலாம். சூடாகச் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

முட்டை & மட்டன் போண்டா



தேவையானவை: முட்டை & 4, பிரெட் ஸ்லைஸ் & 4, மட்டன் கைமா (கொத்துக் கறி) & 100 கிராம், இஞ்சி&பூண்டு விழுது & ஒரு டீஸ்பூன், பொட்டுக்கடலை மாவு & ஒரு டீஸ்பூன், கரம் மசாலா தூள் & அரை டீஸ்பூன், உப்பு & தேவையான அளவு, மஞ்சள்தூள் & தேவையான அளவு, எண்ணெய் & தேவையான அளவு, பச்சை மிளகாய் & 3.

செய்முறை: முட்டையை உப்புப் போட்டு வேகவையுங்கள். ஒரு வாணலியில் சிறிது எண்ணெயைக் காயவைத்து, கொத்துக்கறி, இஞ்சி&பூண்டு விழுது, கரம் மசாலா தூள், மஞ்சள்தூள், பச்சை மிளகாய் எல்லாவற்றையும் போட்டு நன்கு வதக்குங்கள். பிறகு, அவற்றை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்தெடுங்கள். அரைத்த கலவையில் பொட்டுக்கடலை மாவையும் உப்பையும் சேர்த்து நன்கு பிசையுங்கள்.

பிசைந்த கலவையில் சிறிது எடுத்து, ஒரு கிண்ணம் போல செய்து, அதனுள் வேகவைத்த முட்டையை வைத்து மூடுங்கள். பிரெட்டை தண்ணீரில் நனைத்துப் பிழிந்து, முட்டை உருண்டையின் மேல் தடவி, ‘ரோல்’ செய்யுங்கள். எண்ணெயைக் காயவைத்து, இந்த போண்டாக்களை அப்படியே போட்டுப் பொரித்தெடுங்கள். விருந்துகளில் செய்து வைத்தால், முதலிடம் பிடிக்கும் அயிட்டம் இதுவாகாத்தாக் இருக்கும்.

எக்&சிக்கன் சப்பாத்தி ரோல்ஸ்



தேவையானவை: சப்பாத்தி & 4, முட்டை & 4, சிக்கன் (எலும்பு இல்லாதது) & 150 கிராம், பெரிய வெங்காயம் & 1, மிளகுதூள் & கால் டீஸ்பூன், மஞ்சள்தூள் & ஒரு சிட்டிகை, உப்பு & சுவைக்கேற்ப. அரைக்க: மிளகு & கால் டீஸ்பூன், சோம்பு, சீரகம் (இரண்டும் சேர்த்து) & கால் டீஸ்பூன், இஞ்சி & ஒரு துண்டு, பூண்டு & 3 பல், பட்டை & 1.

செய்முறை: சிக்கனை சிறு துண்டுகளாக நறுக்கி, நன்கு கழுவி வைத்துக்கொள்ளுங்கள். அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை லேசாக நீர் விட்டு அரைத்து, எண்ணெயில் நன்கு வதக்குங்கள். பச்சை வாசனை போனதும், சிக்கன் துண்டுகளையும் போட்டு, சிறிது உப்பு போட்டு, சுருள சுருளக் கிளறி இறக்குங்கள். முட்டையுடன் மஞ்சள்தூள், உப்பு, மிளகுதூள் சேர்த்து அடித்துக்கொள்ளுங்கள். தோசைக்கல்லைக் காயவைத்து, தீயை நன்கு குறைத்துவைத்து, சப்பாத்தியை கல்லில் போட்டு, அதன் மேல் முட்டையை ஊற்றிப் பரப்பிவிட்டு, அந்த லேயர் மேல் சிக்கன் மசாலாவைத் தூவி, (தோசைக்கல்லில் இருக்கும்போதே) சப்பாத்தியை அப்படியே பாய் போல மெதுவாக சுருட்டுங்கள். கல்லின் சூட்டுக்கு, ரோல் நன்கு சிக்கன், முட்டை கலவையுடன் பிடித்துக்கொள்ளும். அப்படியே சுற்றிலும் எண்ணெய் விட்டு, திருப்பிவிட்டு வேகவிடுங்கள். இது வேக 5 நிமிடமாகும். வெந்தபிறகு சிறு துண்டுகள் போட்டுப் பரிமாறுங்கள். பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்கு, லன்ச் பாக்ஸில் வைத்து அனுப்ப ஏற்றது.

குறிப்பு: மதியம் செய்து மிச்சமான சிக்கன் கிரேவி இருந்தாலும், இந்த சப்பாத்தி ரோல்ஸ் செய்யலாம். குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவார்கள்

முட்டை குழிப்பணியாரம்



தேவையானவை: முட்டை & 4, இட்லி மாவு & அரை கப், மிளகு&சீரகத் தூள் & 2 டீஸ்பூன், (விருப்பப்பட்டால்) மஞ்சள்தூள் & கால் டீஸ்பூன், உப்பு & கால் டீஸ்பூன்.

செய்முறை: சிறிது தண்ணீரில், மிளகு&சீரகத் தூள், மஞ்சள்தூள், உப்பு கரைத்து முட்டையை ஊற்றி அடித்துக்கொள்ளுங்கள். அத்துடன் இட்லி மாவைச் சேர்த்து நன்கு கலந்துகொள்ளுங்கள். குழிப்பணியாரக் கல்லைக் காயவைத்து, முதலில் சிறிது எண்ணெய் ஊற்றி, மாவைப் பணியாரங்களாக ஊற்றி, வெந்ததும் திருப்பிவிட்டு எடுக்கவேண்டும். (வெறும் முட்டையை மட்டும் பணியாரமாக ஊற்றியெடுத்தால், ஆறியதும் அமுங்கிவிடும். இட்லி மாவு கலந்து சுடுவதால், அப்படியே உருண்டையாக இருக்கும்).

முட்டை இடியாப்பம் (தாளித்தது)


தேவையானவை: முட்டை & 4, இடியாப்பம் (உதிர்த்தது) & 2 கப், தேங்காய்ப்பால் & ஒரு கப், சின்ன வெங்காயம் & 6, காய்ந்த மிளகாய் & 4, கடுகு, உளுத்தம்பருப்பு & தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை & ஒரு ஆர்க்கு, எண்ணெய் & 4 டீஸ்பூன், உப்பு & ஒரு சிட்டிகை.

செய்முறை: ஒரு பாத்திரத்தில் இடியாப்பத்தைப் போட்டு, தேங்காய்ப்பாலை ஊற்றிப் பிசைந்து அழுத்திவையுங்கள். சிறிது நேரத்தில், தேங்காய்ப்பாலை இடியாப்பம் இழுத்துக்கொண்டு ‘பொலபொல’வென உதிரியாகி விடும்.

பிறகு, முட்டையை உடைத்து ஊற்றி, ஒரு சிட்டிகை உப்பு போட்டு, நன்கு அடித்துவைத்துக்கொள்ளுங்கள். வெங்காயத்தைப் பொடியாக நறுக்குங்கள். கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் போட்டு, வெங்காயத்தைக் கொட்டி வதக்குங்கள். ஊறவைத்த இடியாப்பத்தை இதில் கொட்டி, இரண்டு கிளறு கிளறி, அடித்துவைத்த முட்டையை தூக்கி ஊற்றிக் கிளறுங்கள். தீயைக் குறைத்துவைத்து, இடியாப்பமும் முட்டையும் நன்கு உதிர் உதிராக வரும்வரை கிளறுங்கள். இதுவரை சுவைத்திருந்த புது ருசியில் இருக்கும் இந்த இடியாப்பம்.

முட்டை ஸ்டஃப்டு பூரி

Sunday, November 26, 2006

சமையல்-பிறமொழி சொற்களையும் அர்த் தங்களையும்

Issue date : 23-05-2003(aval0106.shtml)



சமையல் தொடர்பான பிறமொழி சொற்களையும் அர்த் தங்களையும் சேகரிக்கத் தொடங்கியிருக்கிறார்

பிளான்சிங் (Blanching): காய்கறி அல்லது பழங்களை வெந்நீரில் முக்கி எடுத்து அதன் தோலை உரிப்பது பிளான்சிங்.

சாப்பிங் (Chopping): காய்கறிகளை துண்டங்களாக நறுக்குவது/ வெட்டுவது.

க்ரஷ்ஷிங் (Crushing): உலர்ந்த பொருட்களை தூளாக (மையாக அல்ல, ரவை மாதிரி) திரிப்பது.

டீப் ஃப்ரை (Deep fry): பண்டம் மூழ்கும் அளவு வாணலியில் அதிக எண்ணெய் ஊற்றி அதில் போட்டு சிவக்க பொரிப்பது.

கார்னிஷ் (Garnish): சமைத்த பொருட்களின் மேல் மற்ற காய்கறி களை வைத்து அலங்கரிப்பது. (உ.ம்: துருவிய கொத்தமல்லி இலை)

கிரேட்டிங் (Grating): துருவுவது. (உ.ம்: தேங்காய், கேரட்)

சாட் (Saute): எண்ணெயில் வதக்குவது.

நீட் (Knead): நீர் விட்டு சேர்த்துப் பிசைவது (உ.ம்: கோதுமை மாவு, மைதா)

மாஷ் (Mash): உருளைக்கிழங்கு போன்றவற்றை வேக வைத்து தோல் நீக்கி மத்தினாலோ கையினாலோ மசிப்பது.

மெல்ட் (Melt): திடப் பொருட்களை உருக்கி திரவமாக மாற்றுவது (வெண்ணெய் - நெய்).

மின்ஸ் (Mince): பெரிதாக உள்ள காய் அல்லது கறியை பொடிப் பொடியாக அரிவது.

பேஸ்ட் (Paste): நைசாக உள்ள மாவு பண்டங்களுடன் தண்ணீர் சேர்த்து குழைப்பது.

பீலிங் (Peeling): தோல் நீக்கும் கருவியால் பீராய்ந்து எடுப்பது.

சீசனிங் (Seasoning): தாளிப்பது.

ஷேலோ ஃப்ரை (Shallow fry): குறைந்த அளவே எண்ணெய் வைத்து சிவக்கவிடாமல் பொரித்தெடுப்பது.

சீவ் (Sieve): சலிப்பது.

ஸ்டர் (Stir): கிளறுவது.

அ-கிராடின் (Au-Gratin): ஒரு பண்டத்தை சாஸ், ரொட்டித்தூள், சீஸ் இவற்றால் மூடி வேக (ஆஹநிக்) வைப்பது.

பேஸ்ட் (Baste): உணவு தயாராகும் போதே உலர்ந்து விடாதிருக்க அதை சுற்றியிருக்கும் எண்ணெய் அல்லது அது வேகும் திரவத்தை கரண்டியால் எடுத்து அவ்வப்போது மேலே ஊற்றுவது. (சோமாசி முதலியன பொரிக்கும்போது வாணலியில் உள்ள சூடான எண்ணெயை கரண்டியால் அதன் மேல் வாரி ஊற்றுவது மாதிரி).

பேட்டர் (Batter): பல பொருட்களை ஒன்றாக கலந்து மாவு கரைப்பது (பஜ்ஜி மாவு, கேக் கலவை, இட்லி மாவு).

பிளெண்ட் (Blend): இரண்டு மூன்று சாமான்களை சீராக ஒன்றாக கலப்பது.


காரமலைஸ் (Caramelize): வெறும் வாணலியில் சர்க்கரை போட்டு நீர் சேர்க்காமல் சூடாக்கி உருக்கி பிரவுன் நிறம் வரும்வரை கொதிக்க வைப்பது. (டநூயுப் கேக் பிரவுன் நிறம் வருவதற்காக இது சேர்க்கப்படும்.)

கட் அண்ட் போல்ட் (Cut & Bold): கலவையை கையால் பிசையாமல் மழுங்கலான கத்தி அல்லது முள்கரண்டியால் சீராக கலப்பது.

டோ (Dough): கெட்டியாக பிசைந்த மாவு (சப்பாத்தி மாவு).

டைஸ் (Dice): சிறு துண்டங்களாக வெட்டுவது.

மாரினேட் (Marinate): காய்கறி, மாமிசம், மீன் போன்றவற்றை துண்டங்களாக வெட்டி மசாலாவில் பிசறி ஊற வைப்பது.

பார் பாய்ல் (Par boil): அரை வேக்காடாக வேக வைப்பது.

பியூரி (Puree): பழம், காய்கறி, இவற்றை மசித்த கூழ் (தக்காளி).

விப் (Whip): கடைதல் (தயிர், முட்டை).

விஸ்க் (Whisk): நுரை வரும் அளவுக்கு வேகமாக விடாமல் அடித்தல் (முட்டை உடைத்து ஊற்றி கேக்கிற்கு அடிப்பது போல).

டஸ்ட் (Dust): லேசாக ரொட்டித் தூள் அல்லது மைதா போன்றவற்றில் பண்டத்தை புரட்டி எடுப்பது.

கிரைண்ட் (Grind): அரைப்பது.

ஸ்டீம் (Steam): ஆவியில் வேக விடுதல்.

ஃபர்மென்டேஷன் (Fermentation): நுரை பொங்க புளிக்க வைப்பது.

பேக் (Bake): உலர் சூட்டினால் பொருட்களை வேக வைப்பது (கேக் செய்முறை).

கன்சோம் (Consomme): கெட்டிப்படாமல் நீர்த்துள்ள சூப்.

ட்ரெய்ன் (Drain): பண்டங்களில் இருந்து நீரை வடித்து எடுப்பது.

கம்பைன் (Combine): ஒரு பொருளுடன் இரண்டோ அல்லது அதிகமாகவோ சேர்ப்பது.

டிஸ்சால்வ் (Dissolve): கரைப்பது

கிரேவி (Gravy): சமைக்கும் பண்டத்தில் உள்ள குழம்பு வடிவம்.

ரோல் (Roll): பூரி, சப்பாத்திக்கு மாவை உருட்டி வைத்து குழவியால் திரட்டுவது.

ஸ்க்குவீஸ் (Squeeze): பிழிந்தெடுப்பது (எலுமிச்சை, சாத்துக்குடி போன்றவற்றை திருகித் திருகி சாறெடுப்பது மாதிரி).

சோக் (Soak): ஊறவைப்பது (தண்ணீரிலோ அல்லது மற்ற திரவ பொருட்களிலோ).

ட்ரெட்ஜ் (Dredge): மாவினாலோ அல்லது சர்க்கரையினாலோ செய்த பொருளை மூடுவது (கோட் செய்வது).

கிரீஸ் (Grease): கேக், பர்பி போன்ற கலவைகளை துண்டங்கள் போடுவதற்காக தட்டை நெய் தடவி வைப்பது.

சிம்மர் (Simmer): கொதி நிலைக்கும் கீழே சமைப்பது.

மிளகு, சீரகம், சோம்பு, ஏலக்காய் போன்றவற்றை வீட்டிலேயே இரண்டு வாரத்துக்கு ஒருமுறை மிக்ஸியில் பொடித்து வைத்துக் கொண்டால் வாசனையாய் சமைக்க உதவும். கடாயில் போட்டு வறுத்துக் கொண்டிருக்காமல், ஃபிரீஸரில் ஒரு நாள் முழுவதும் வைத்து நேரடியாக மிக்ஸியில் போட்டு சுற்றுங்கள். நிமிடத்தில் பொடித்து விடலாம்.

புலவ், குருமா, உருளைக்கிழங்கு, வாழைக்காய் வறுவல் இவற்றை சமைத்து முடிக்கும்போது சிறிது சோம்புப் பொடி, ஏலக்காய் பொடி தூவி இறக்கினால் மணமோ மணம். சப்பாத்திக்கு செய்யும் சைட் டிஷ்களுக்கும் இதே உத்திதான்.

Thursday, November 23, 2006

Soya,சோயா

Issue date : 08-Nov-2006(kumudam)

சோயா மாவை ‘ஒண்டர்பீன்’ என்று கூறி புளகாங்கிதப்படுகிறது அமெரிக்கன் சோயாபீன்ஸ் அசோசியேஷன். வியப்புக்குரிய இந்த சோயாவை சப்பாத்தி, பூரி, கட்லட், வடை, பக்கோடா, சிப்ஸ், முறுக்கு, சோயா உருண்டைக் குழம்பு, பொரியல் என்று கலந்து கட்டி அடிக்கலாம். ஆனால், வெறும் சோயா மட்டுமே உபயோகித்து சமைக்காமல் மற்ற காம்பினேஷனுடன்தான் சமைக்கவேண்டும்.

சோயாவை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள் என்று மருத்துவர்களும் சமையல் நிபுணர்களும் அறிவுறுத்திக்கிட்டே இருக்காங்க. ஆனால், சோயாவை எடுத்துக்கொண்டால், அஜீரணக் கோளாறு ஏற்படுகிறதே என்று நிறைய குடும்பத் தலைவிகள் வருத்தத்துடன் கேட்பதுண்டு. முதன்முதலாக சோயா சம்பந்தப்பட்ட உணவு சாப்பிடும்போது அஜீரணத் தொல்லைகள் சிலருக்கு மட்டுமே ஏற்பட வாய்ப்புகள் உண்டு. சில குறிப்புகளை மனதில் கொண்டு சோயாவைச் சமைத்தால், அஜீரணக் கோளாறுகளிலிருந்து எளிதாக எஸ்கேப் ஆகலாம்.

கோதுமை மாவுடன் சோயாபீன்ஸை சேர்த்து அரைக்கும்போது... சோயாவை வெறும் வாணலியில் சூடாகும் வரை வறுத்துக்கொள்ளுங்கள். பிறகு 4 கிலோ கோதுமைக்கு ஒரு கிலோ சோயா என்ற கணக்கில் சேர்த்து, மிஷினில் அரைத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு முறையும் வீட்டில் சப்பாத்தி செய்யும்போது இந்த மாவைப் பயன்படுத்தினால், மறைமுகமாக புரதச் சத்தும் சேர்ந்துவிடும். சோயாவை வறுப்பதால் அஜீரணக் கோளாறு ஏற்படும் வாய்ப்பும் மிகக் குறைவு.

சோயா உருண்டைகளைப் பயன்படுத்தும்போது... உருண்டைகளை வெந்நீரில் பதினைந்து நிமிடங்கள் ஊறவைத்து வடிகட்டுங்கள். அதைப் பிழிந்து குளிர்ந்த தண்ணீரில் போட்டு மறுபடியும் பிழிந்த பிறகே சமையலில் பயன்படுத்த வேண்டும்.

சோயா உணவுகளை ஒரேயடியாக அதிகஅளவு சாப்பிடுவதைத் தவிர்த்துவிட்டு, கொஞ்சம் கொஞ்சமாக உணவில் சேர்த்து சாப்பிடவேண்டும். அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு... இதற்கு சோயாவும் விதிவிலக்கல்ல. எந்தவிதமான சமையலில் சேர்க்கும்போதும், அதில் சோயாவை 4_க்கு ஒரு பங்குக்கு மேல் சேர்க்கவேண்டாம்.

தட்டை, முறுக்கு செய்ய வைத்திருக்கும் மாவில் சோயாமாவு சிறிதளவு சேர்த்தால் ருசி மாறாது, அதிக எண்ணெயும் குடிக்காது. ஒரு தடவை சாப்பிட்டு விட்டு அஜீரணக் கோளாறு ஏற்பட்டு விட்டதே என்று சோயாவை சமையலிருந்து ஒதுக்கிவிட வேண்டாம், அதிகமாகச் சேர்த்துக்கொள்ளாமல், சிறிதளவு சேர்த்தால் எந்தத் தொந்தரவும் இருக்காது... சுருக்கமாய்ச் சொன்னால் சோயா, ஒரு மாயாஜாலம்!

கேள்வி பதில் :

சாதாரண பிரஷர் குக்கரில் அரிசி சமைக்கும் முறைக்கும், மைக்ரோவேவ் ஓவனில் சமைக்கும் முறைக்கும் ஏதாவது வித்தியாசம் உண்டா? பிரஷர் குக்கரில் வைக்கும் அளவு தண்ணீர்தான் மைக்ரோவேவ்ஓவனில் வைக்க வேண்டுமா? கொஞ்சம் சொல்லுங்களேன். மைக்ரோவேவ் ஓவனில் வைத்தால் மட்டும், சாதம் சரியாக வருவதில்லையே?

_ ஜெயந்தி முரளிதரன், ஆலப்பாக்கம்.

பிரஷர் குக்கரில் சமைப்பதைவிட ஓவனில் சமைக்கும்போது, சிறிதளவு தண்ணீர் அதிகமாக விடவேண்டும். தண்ணீரில் அரைமணி நேரம் ஊறவைத்து அதே தண்ணீரில் சமைக்கலாம். அதாவது, குக்கரில் ஒரு கப் அரிசிக்கு மூன்று கப் தண்ணீர் என்றால் மைக்ரோவேவ் ஓவனில் மூன்று கப் அரிசிக்கு மூணேகால் கப் தண்ணீர் வைத்தால், சரியாக இருக்கும். புழுங்கலரிசியாக இருந்தால் ஒரு கப் அரிசிக்கு மூணே முக்கால் கப் தண்ணீரும், ஒரு கப் பாசுமதி அரிசிக்கு இரண்டேகால் கப் தண்ணீரும் தேவைப்படும். எப்போதும் ஓவனில் வைக்கும்போது பாத்திரத்தில் தண்ணீரும், அரிசியும் சேர்ந்து பாதி அளவுக்கு அதிகமாகாமல் பார்த்துக்கொண்டால், பொங்கி வழியாமல் இருக்கும்! ஸீ

சோயா கார சிப்ஸ்

தேவையான பொருட்கள் : மைதா மாவு _ 1 கப், சோயா மாவு _ கால் கப், நெய் _ 2 டீஸ்பூன், உப்பு _ அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் _ 2 சிட்டிகை, கரகரப்பாக பொடித்த மிளகு சீரகம் _ அரை டீஸ்பூன், எண்ணெய் _ பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை : மைதாவுடன் சோயாமாவு சேர்த்து சலித்துக் கொள்ளவும். ஒரு அகல பேஸினில் நெய்யை விரல்களால் நன்கு குழைக்கவும். பிறகு அதில் சலித்த மாவு, உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு பிசறி விடவும். நெய் முழுவதும் மாவில் தெளித்து கெட்டியான சப்பாத்தி மாவைப் போல பிசையவும். கால் அங்குல கனத்திற்குச் சப்பாத்தி போல இடவும். ஒரு கத்தியால் சிறிய சதுரங்களாக வெட்டவும். சூடான எண்ணெயில் பொரித்து எடுங்கள்!

சில்லி சோயா :

தேவையான பொருட்கள் : சோயா உருண்டைகள், சில்லி சாஸ், மக்காச்சோள மாவு, மைதாமாவு, அரிசி மாவு, உப்பு ருசிக்கேற்ப, வினிகர் _ 1 டேபிள் ஸ்பூன், எண்ணெய் _ பொரிக்கத் தேவையான அளவு.

அரைத்துக் கொள்ளவும்: பூண்டு _ 8 பல்லு, இஞ்சி _ 1 அங்குலத்துண்டு, பச்சைமிளகாய் _ 2.

செய்முறை : பிரஜர்பேனில் தண்ணீர்விட்டு சூடாக்கவும். கொதி வரும்போது சோயா உருண்டைகள் சேர்த்து மூடியால் மூடி ஒரு விசில் வந்தவுடன் அடுப்பை அணைக்கவும். சிறிது நேரம் கழித்து மூடியைத் திறந்து வடிகட்டவும். சோயாவை நன்கு பிழிந்து எடுத்து குளிர்ந்த நீரில் போடவும். மறுபடியும் பிழிந்து எடுத்து தனியே வைக்கவும்.

இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாயை நைசாக அரைத்து அதோடு சிறிது உப்பு, வினிகர், சில்லி சாஸ் கலந்து சோயாவின் மீது தெளித்து கைகளால் கலந்துவிடவும். இதை அப்படியே ஃப்ரிட்ஜில் முக்கால் மணிநேரம் வைத்துவிடவும். வாணலியில் எண்ணெய் சூடானதும், ஃப்ரிட்ஜிலிருந்து எடுத்து கைகளால் பிசறிவிட்டு உருண்டைகளை ஒவ்வொன்றாக எடுத்து எண்ணெயில் கொள்ளும்வரை போடுங்கள். நன்கு கரகரப்பாக பொரித்து எடுத்து சூடாக தக்காளி சாஸ§டன் சாப்பிட்டால் படு டேஸ்டியாக இருக்கும்!

(கமகமக்கும்)
- ஜனனி

From Aval Vikatan (23-05-2005)
சோயா பிரியாணி



தேவையான பொருட்கள்:

பாசுமதி அரிசி - 2 கப், சோயா உருண்டைகள் - 15, பெரிய வெங்காயம் - 3, தக்காளி - 3, பச்சை மிளகாய் - 1, இஞ்சி - 1 துண்டு, பூண்டு - 5 பல், புதினா - அரை கட்டு, மல்லித்தழை - கால் கட்டு, மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன், சற்று புளிப்பான தயிர் - கால் கப், எலுமிச்சம் பழம் - 1 மூடி, பட்டை, லவங்கம், ஏலக்காய் - தலா 2, நெய் - 1 டேபிள் ஸ்பூன், எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன், உப்பு - தேவைக்கு.

செய்முறை:

அரிசியை கழுவி ஒன்றுக்கு ஒன்றரை என்ற அளவில் தண்ணீர் சேர்த்து ஊற வையுங்கள். சோயாவை கொதிக் கும் நீரில் பத்து நிமிடம் போட்டெடுத்து குளிர்ந்த நீரில் இரு முறை அலசி எடுங்கள். வெங்காயம், தக்காளியை நீள நீளமாக நறுக்குங்கள். மிளகாயை கீறி வையுங்கள். இஞ்சி, பூண்டை அரைத்து வையுங்கள். புதினா, மல்லியை சுத்தம் செய்து வையுங்கள். குக்கரில் நெய், எண்ணெயை காய வைத்து பட்டை, லவங்கம், ஏலக்காயை தாளித்து பின்னர் வெங்காயம், சிட்டிகை உப்பு சேர்த்து நன்கு நிறம் மாறும் வரை வதக்குங்கள். பிறகு தக்காளி, மிளகாய்த்தூள் சேர்த்து மூன்று நிமிடம் வதக்கி தயிர், எலுமிச்சம் பழச்சாறு சேருங்கள். தயிர் நன்கு கொதித்து எண்ணெய் கசிந்ததும் ஊற வைத்த அரிசியை தண்ணீ ருடன் சேருங்கள். தேவையான உப்பு சேர்த்து மூடி வெயிட் போடுங்கள். ஒரு விசில் வந்ததும் தீயைக் குறைத்து பத்து நிமிடம் வைத்து இறக்குங்கள். சூடாக பரிமாறுங்கள்.

சோயா சமோஸா


தேவையான பொருட்கள்:

மேல் மாவிற்கு: மைதா - 1 கப், சீரகம் - அரை டீஸ்பூன், உப்பு - கால் டீஸ்பூன், எண்ணெய் - தேவைக்கு.

பூரணத்திற்கு: சோயா உருண்டைகள் - 10, கடலை பருப்பு - அரை கப், மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், கரம் மசாலா - அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் - 1, மல்லித்தழை - சிறிதளவு, எலுமிச்சம் பழச் சாறு - 2 டீஸ்பூன், உப்பு - அரை டீஸ்பூன்.

செய்முறை:
மைதாவுடன் சீரகம், 2 டீஸ்பூன் எண்ணெய், உப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து உருட்டி அதன் மேல் சிறிதளவு எண்ணெய் தடவி மூடி வையுங்கள். கடலைப் பருப்பில் சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு வேக வைத்து தண்ணீரை வடித்து விடுங்கள். சோயாவை கொதி நீரில் பத்து நிமிடங்கள் போட்டு பின்னர் குளிர்ந்த நீரில் அலசி எடுத்து நன்கு பிழிந்து மிக்ஸியில் அரைத்து உதிர்த்துக் கொள்ளுங்கள். இதனுடன் பருப்பு மற்றும் மிளகாய்த்தூள், கரம் மசாலா, பச்சை மிளகாய், (பொடியாக நறுக்கப்பட்ட) மல்லித்தழை, எ.சாறு, உப்பு சேர்த்து கலந்து வையுங்கள். பிசைந்து வைத்துள்ள மாவிலிருந்து சிறிதளவு எடுத்து மெல்லிய சிறிய சப்பாத்திகளாக தேய்த்து அதை இரண்டாக வெட்டுங்கள். ஒரு பாதியை கோன் போல மடித்து நடுவில் பூரணத்தை வைத்து ஓரங்களை தண்ணீர் தொட்டு ஒட்டுங்கள். இதே போல எல்லாவற்றையும் செய்து சூடான எண்ணெயில் பொரித்தெடுங்கள்

சோயா சுப்ரீம்

தேவையான பொருட்கள்:
சோயா உருண்டைகள் - 15, மக்ரோன் - அரை கப், தேங்காய்ப்பால் - ஒன்றரை டம்ளர், இஞ்சி - 1 துண்டு, பூண்டு - 5 பல், பச்சை மிளகாய் - 3, கேரட் - 1, பீன்ஸ் - 10, நெய் - 1 டேபிள் ஸ்பூன், மல்லித்தழை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
சோயா உருண்டைகளை கொதிக்கும் நீரில் பத்து நிமிடங்கள் போட்டு எடுத்து பிறகு குளிர்ந்த நீரில் இரண்டு முறை அலசி பிழிந்து ஒவ்வொன்றையும் நான்கு துண்டுகளாக நறுக்குங்கள். மூன்று கப் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் மக்ரோனை வேக வைத்து எடுத்து குளிர்ந்த நீரில் அலசுங்கள். கேரட், பீன்ஸை பொடியாக நறுக்கி சிறிதளவு உப்பு சேர்த்து வேக வைத்தெடுங்கள். பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டை நசுக்கி வையுங்கள். பாதியளவு தேங்காய்ப் பாலை எடுத்து அதில், நசுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, உதிர்த்த சோயா, மக்ரோன் ஆகியவற்றை சேர்த்து மிதமான தீயில் வைத்து தேங்காய்ப் பால் வற்றும் வரை கிளறுங்கள். பிறகு வேக வைத்த காய்கறிகள், மீதமுள்ள தேங்காய்ப்பால் சேர்த்து ஐந்து நிமிடங்கள் கொதிக்க வைத்து கடைசியில் நெய், பொடியாக நறுக்கிய மல்லித்தழை சேர்த்துக் கிளறி இறக்குங்கள்.

ஸ்வீட் கார்ன் சூப்,வெஜிடபிள் ஃபிங்கர்ஸ்

Issue date : 15-Nov-2005(Kumudam,குமுதம்)

மழைக்காலம் வந்தால் அவ்வளவுதான். குடும்பத் தலைவிகளுக்கு கிச்சனில் வேலை பெண்டு கழற்றும். வீட்டில் இருப்பவர்கள் சூடாக மொறுமொறுவென்று இதைக் கொண்டுவா, அதைச் செய்து தா என்று அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவாங்க. அவர்களுக்கு நொறுக்குத் தீனி செய்து கொடுக்கும் அதே நேரத்தில், அவர்களுடைய ஆரோக்கியத்தையும் மறந்து விடாதீர்கள்.

காலை வேளைகளில் சாம்பாரை கட் பண்ணி ஜிவ்வுன்னு காரசாரமான குழம்பு வகைகள், ரசம், சூப், டிபன் வகைகள் இதுதான் மழைக்கால மெனுவாக இருக்கவேண்டும். அதே நேரம், மழைக்காலத்தில் வாய்ப்பசிக்கு கணக்குத் தெரியாமல் அளவுக்கு அதிகமாகச் சாப்பிட்டுவிட்டு அஜீரண கோளாறுகளால் அவதிப்படுவார்கள். அதனால் மதிய உணவில் தூதுவளைக் கீரையில் பூண்டு, சின்னவெங்காயம், உப்பு போட்டு நல்லெண்ணெயில் வதக்கி எடுத்துக்கொள்ளுங்கள். இதைச் சாதத்தில் பிசைந்து இரண்டு உருண்டை சாப்பிட்டுவிட்டு வழக்கமான மதிய உணவை எடுத்துக் கொள்ளலாம். அதே மாதிரி புதினா கஷாயமும் அவசரத்துக்கு உதவும். ஒரு பிடி புதினா இலை, ஒரு டம்ளர் தண்ணீர் இவை இரண்டையும் ஒரு பாத்திரத்தில் போட்டு சிறிது நேரம் கொதிக்க வைத்தபிறகு, வடிகட்டிக் கொள்ளுங்கள். இளம் சூடாக இருக்கும்போது இதில் உப்பு, மிளகுத்தூள் சேர்த்துக் குடித்தால் வழக்கமாக மழைக்காலத்தில் வந்து தொல்லைப் பண்ணும் சளி, இருமல், தொண்டைக் கமறல் போன்றவை ஓடியே போய்விடும்.

வழக்கமாக நம்ம ஊரில் பிரண்டையில் செய்யும் துவையல், ரசம், மழைக்காலத்தில் ரொம்ப பாப்புலர். பிரண்டையை இடித்து கரைசல் தயார் பண்ணிட்டு அதில் புளி, காரம் தூக்கலாகப் போட்டு சமைத்தால் அட்டகாசமாக இருக்கும்.

ஸ்வீட் கார்ன் சூப்

இந்தக் காலத்தில் சுடச் சுட சூப் குடித்தால் சூப்பரா இருக்கும். வழக்கமா நாம ஹோட்டலில் குடிக்கிற ஸ்வீட் கார்ன் சூப்பை வீட்டில் செய்து பாருங்களேன்.

தேவையான பொருட்கள் :

சோளக்கதிர் - 4, வெள்ளை வெங்காயம் - 1, வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன், பால் - 1 கப், அஜினோ மோட்டோ - அரை டீஸ்பூன், வெள்ளை மிளகுத்தூள் - தேவையான அளவு, உப்பு, சர்க்கரை - தேவையான அளவு, சோயா சாஸ் - சில துளிகள், இஞ்சி - ½ அங்குலத்துண்டு.

செய்முறை : வெண்ணெயில் சில நிமிடங்கள் நறுக்கிய வெங்காயத்தை வதக்கவும். சோளத்தை உரித்து, பெரிய கண் உடைய துருவியில் லேசாகத் துருவிக்கொள்ளவும். நடுத்தர அளவுடைய பாத்திரத்தில் துருவிய சோளத்தை எடுத்துக்கொண்டு, பால், தண்ணீர் சேர்க்கவும். அதோடு வதக்கிய வெங்காயம், இஞ்சி சேர்க்கவும். பிரஷர் குக்கரில் பத்து நிமிடங்கள் சோளம் நன்கு வேகும் வரையில் வெயிட் வைத்தபின் வேகவிடவும். வெந்தபின் ஆறவைத்து, இஞ்சித்துண்டை எடுத்துவிடவும். வேகவைத்த முழு சோள மணிகள் இரண்டு டேபிள்ஸ்பூன் அளவுக்குத் தனியே எடுத்து வைக்கவும். மீதமுள்ளவற்றை மிக்ஸியில் கடைந்து நைசாக அரைத்துக்கொள்ளவும். நன்கு வடிகட்டி தேவையான திட்டத்திற்குத் தண்ணீராக்கிக் கொள்ளவும். உப்பு, சர்க்கரை, அஜினோ மோட்டோ சேர்த்து கொதிநிலை வரும்வரை சூடாக்கவும். நடுவே கலந்துவிடவும். வேக வைத்த சோள மணிகளையும் இத்துடன் சேர்க்கவும். பரிமாறுவதற்கு முன் சோயா சாஸ், மிளகுத்தூள் தூவவும்.

வெஜிடபிள் ஃபிங்கர்ஸ்

தேவையான பொருட்கள் :

பாசிப் பருப்பு - ½ கப், இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன், நசுக்கிய பச்சை மிளகாய் - 1 டீஸ்பூன், நறுக்கிய வெங்காயம் - 3 டேபிள் ஸ்பூன், மிகப் பொடியாக நறுக்கிய காய்கறிகள் _ லு கப் (கேரட், பீன்ஸ், காலிஃப்ளவர், முட்டைக்கோஸ்). புளித்த கெட்டித் தயிர் - 3 டேபிள் ஸ்பூன். சமையல் சோடா - ½ டீஸ்பூன். உப்பு தேவையான அளவு. எண்ணெய் பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை : பருப்பைக் கழுவி தண்ணீரில் இரண்டு மணிநேரம் ஊற வைக்கவும். தண்ணீரை நன்கு வடித்துவிட்டு கெட்டியாக அரைக்கவும். கடைசியில் உப்பு சேர்க்கவும். நறுக்கிய காய்கறிகளை ஆவியில் வேக வைக்கவும். சிறிது எண்ணெயை வாணலியில் விட்டுச் சூடாக்கி, இஞ்சி பூண்டு விழுது, வெங்காயம் சேர்க்கவும். வதங்கியதும் வெந்த காய்கறிகளைச் சேர்க்கவும். நன்றாகக் கலந்து இறக்கவும். வதங்கிய காய்கறிகளை அரைத்த விழுதுடன் கலந்து தயிர், சோடா சேர்க்கவும். நன்றாகக் கலந்து எண்ணெய் தடவிய பெரிய குக்கர் தட்டில் பரப்பி இட்லி போல ஆவியில் வேக வைக்கவும். வெந்ததும் இறக்கி நன்றாக ஆற வைக்கவும். இதை நீளவாக்கில் சின்னத் துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். சூடான எண்ணெயில் பொன்னிறமாகப் பொரித்து சூடாகப் பரிமாறவும்.

சில சமயங்களில் தோசை மாவு ரொம்பவும் புளித்துவிடுகிறது. மிச்சமுள்ள மாவை கொட்டவும் மனசு வரலை. இந்தப் புளித்த தோசை மாவில் ஏதாவது ரெஸிபி செய்ய முடியுமா?

_ தீர்க்கதரிசி, சேலம்_2.

ஓ... தாராளமாகச் செய்யலாமே! புளித்த தோசை மாவில் சிறிது நறுக்கிய, வெங்காயம், பச்சைமிளகாய், ஊறவைத்த கடலைப்பருப்பு சேர்த்து சிறு உருண்டைகளாக்கி, காயவைத்த எண்ணெயில் பொரித்து சாப்பிடலாம். இந்த மொறுமொறு உருண்டைகள் படு டேஸ்டியாக இருக்கும். மாவு உருண்டை போட முடியாமல் மாவு ரொம்பவும் தளர்ந்திருந்தால் ஒரு கைப்பிடி ஜவ்வரிசியை மாவில் சிறிதுநேரம் ஊறவைத்து உருண்டைகள் போடலாம்!

(கமகமக்கும்)
_ ஜனனி

ஆந்திரா சமையல்

Issue date :22-Nov-06

எல்லா மாநில ரெசிபிக்களும் ஒரே மாதிரி இருப்பதில்லை. அவ்வளவு ஏன், வீட்டுக்கு வீடு சமையலில் டேஸ்ட் மாறுபடும்போது, ஒவ்வொரு மாநிலத்திலும் சமைக்கப்படும் ரெஸிபிக்களில் வித்தியாசம் இருப்பது வியப்பில்லை அல்லவா?

ஞாபகத்துக்கு வருவது ஆந்திரா சமையல்தான். நம்ம சமையலில் பத்து மிளகாய் தேவைப்படுகிற இடத்தில், இரண்டு குண்டூர் மிளகாய் போட்டால் போதும். காரம் சுர்ருன்னு இருக்கும். ஆந்திராவில் பெரிய, நீளமான குண்டூர் மிளகாய்தான் பிரபலம். அவங்க சமையலில் காரம் அதிகமாக இருக்கக் காரணமும், இந்த குண்டூர் மிளகாய்தான். தமிழ்நாட்டு சமையலுக்கும் ஆந்திரா சமையலுக்கும் பெரிய வித்தியாசம் கிடையாது. ஆனால், ருசி வேறுபட்டு இருக்கும். ரெண்டுமே வித்தியாசமான டேஸ்ட்.

மதிய சாப்பாட்டில் நமக்கு சாம்பார் கண்டிப்பாக இருந்தாக வேண்டும். ஆனால், அவர்களுக்கு சாம்பார் அவ்வளவு முக்கியமில்லை. மதிய உணவில் துவையல், காய்கறிகளுடன் செய்யப்படும் பப்புதான் மெயின் ஐட்டம்.

எனக்கு ஒரு தெலுங்குத் தோழி இருக்காங்க. அவங்க வீட்டுக்கு எப்போது போனாலும், ஒரு வகை பொடி கத்துக்கிட்டு வருவேன். ஏன்னா, தினமும் ஏதாவது வித்தியாசமான பொடி வகை செய்து வெச்சிருப்பாங்க. கிட்டத்தட்ட நூறு பொடி வகைகள் அவங்களுக்குத் தெரியும். பொடியும், துவையலும்தான் அவங்க வீட்டுச் சாப்பாடு.

ஆந்திராவுக்குப் போனீங்கன்னா எல்லாருடைய வீட்டிலும் ஏதாவது ஒரு பொடி வகை செய்து வைச்சிருப்பாங்க. வெறும் பூண்டு, வறுத்த துவரம் பருப்பு, மிளகாய் போட்டு ஆந்திராவில் வைக்கப்படும் ‘கட்டு’ (ரசம்) ரொம்ப டேஸ்ட்டியாக இருக்கும். கேரளாவில் தேங்காய் இல்லாமல் எந்த ரெசிபியும் கிடையாது. ஆனா, ஆந்திரா சமையலில் தேங்காய் ரொம்பக் குறைவு.

பெரும்பாலான எல்லா ரெசிபிக்களும் புளிப்பா, காரமா சுள்ளுன்னு இருப்பதுதான் ஆந்திரா ஸ்டைல்.

ஆனால், உடல் ஆரோக்கியம் கருதி, ஆந்திரா ரெசிபியிலும் கொஞ்சம் காரம் குறைஞ்சிட்டே வருது. இந்த வாரம் ஆந்திரா ஸ்டைல் ரெசிபிக்கள் சொல்லியிருக்கேன். ரொம்ப காரம் தேவையில்லைன்னா கொஞ்சம் மிளகாய் குறைத்துப் போட்டுக்கலாம்.

கோங்குரா துவையல்

தேவையானப் பொருட்கள் : கோங்குரா கீரை(புளிச்சைக்கீரை) - 1 ½ கப், பச்சை மிளகாய் _ 12, பெரிய வெங்காயம் - 1 (ஒரு அங்குலத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்), தனியா _ 1½ டீஸ்பூன், வெந்தயம் -¼ டீஸ்பூன், கடுகு _ ¼ டீஸ்பூன், பூண்டு - 3 பல், எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன், பெருங்காயம் _ சிறிதளவு, உப்பு _ தேவைக்கேற்ப.

செய்முறை : வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய்விட்டு சூடாக்கவும். கடுகு, வெந்தயம், பெருங்காயம் சேர்க்கவும். பொரிந்தவுடன் தனியே எடுத்துக் கொள்ளவும். அதே எண்ணெயில் தனியா, பச்சை மிளகாய் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி தனியே எடுத்துக் கொள்ளவும். சிறிது எண்ணெயில் தனியே கோங்குரா கீரை இலையைச் சுருங்கும்வரை வதக்கவும். முதலில் வறுத்த பொருட்களையும், பின்னர் வதக்கிய கீரையையும் சேர்த்து இடித்து, கடைசியில் நறுக்கிய வெங்காயத்தையும், உப்பையும் சேர்த்து இடித்துக் கொள்ளவும். வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றிச் சூடாக்கி, சிறிது கடுகு சேர்த்து, அதில் நசுக்கிய பூண்டைப் போட்டு வதக்கிக் கொள்ளவும். இடித்த கோங்குராவை அதில் நன்றாகக் கலந்துகொள்ளவும். சூடான சாதத்துடன் பரிமாறுங்கள்! குறிப்பு : வெந்தயத்தை நீண்ட நேரம் வதக்க வேண்டாம். கசப்பு ஏற்படும்.

கதம்பம் புலுசு :

நம்ம குழம்பைத்தான் அவங்க புலுசுன்னு சொல்றாங்க. சரி... ஆந்திர செய்முறை எப்படின்னு பார்ப்போம்.

தேவையானப் பொருட்கள் : வெண்டைக்காய் - 8, முருங்கைக்காய் -2, உருளைக்கிழங்கு - 2, மலபார் சேனை - சிறிது, சேப்பங் கிழங்கு - 10, சர்க்கரை வள்ளிக் கிழங்கு - 1, பச்சைப்பட்டாணி - சிறிது, தக்காளி - 2, சிகப்பு பூசணி - 1 துண்டு, வேகவைத்த துவரம்பருப்பு _ ½ கப், சாம்பார் பவுடர் -2½ டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு, வெல்லம் - சிறிதளவு, புளி - பெரிய எலுமிச்சை அளவு, பச்சை மிளகாய் - 3, கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிது.

செய்முறை : கிழங்கு வகைகளை பிரஜர் குக்கரில் வேக வைத்து உரித்து, பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். மற்ற காய்கறிகள் அனைத்தையும் இரண்டு அங்குல நீளத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். சிறிது எண்ணெயில் கத்திரிக்காய், வெண்டைக்காயை வதக்கிக் கொள்ளவும். வதங்கிய காய்கறிகளோடு மற்ற காய்கறிகளையும் சேர்த்து, நீர்த்த புளிக் கரைசலில் வேக வைக்கவும். உப்பு, வெல்லம், கீறிய பச்சை மிளகாய், சாம்பார் பவுடர், வேக வைத்து மசித்த துவரம்பருப்பு, ஆகியவற்றையும் சேர்த்து குழம்பு கெட்டியாகும்வரை வேக வைக்கவும். சிறிது எண்ணெயைச் சூடாக்கி தாளித்தப் பொருட்களைச் சேர்த்துத் தாளித்து குழம்பில் கலந்து கொள்ளவும். அரிந்த கொத்தமல்லித் தழை, கறிவேப்பிலையை கடைசியில் சேர்க்கவும்.

(கமகமக்கும்)
_ ஜனனி
படங்கள் : ஆர்.சண்முகம்

சமைத்த உணவில் உப்பு அதிகமாகிவிட்டால் என்ன செய்வது?

_ மஞ்சுளா,
திருவண்ணாமலை.

உணவில் அதிகம் உப்பு சேர்க்காமல் கவனமாக சமைக்கணும். அப்படித் தவறி உப்பு அதிகமானால், நோ டென்ஜன். உணவில் உப்பைக் குறைக்க, சில ஈஸி வழிகள் இருக்கு. குழம்பில் உப்புக் கரித்தால் தக்காளிப் பழத் துண்டுகளைப் போடலாம். ஒரு உருண்டை சாதத்தைச் சுத்தமான மஸ்லின் துணியில் கட்டிக் குழம்பினுள் இறக்கிவிட்டு கொஞ்ச நேரம் அப்படியே விட்டு, பின்பு துணி மூட்டையை எடுத்துவிடலாம். ரசத்தில் உப்புக் கூடிவிட்டால், இறக்கியவுடன் எலுமிச்சை சாற்றைப் பிழியலாம். பொரியல் கூட்டு போன்றவற்றில் உப்புக் கரித்தால் அடுப்பிலிருந்து இறக்கும் சிறிது நேரத்துக்கு முன்பு தேங்காய் துருவி போட்டால் ஆச்சு!

Saturday, November 18, 2006

வீட்டிலேயே செய்யுங்க-அவல்

வீட்டிலேயே செய்யுங்க-அவல்
Issue date : 27-feb-2004

அவல்.. விரத தினங்களில் மட்டுமே நினைவுக்கு வரும் பெயர் இது. பசியை அடக்குவதோடு, தெம்பையும் தரக்கூடியது என்பதுதான் இதன் ஸ்பெஷாலிட்டி. அந்த தினங்களில்கூட ஊறவைத்த அவலுடன் தேங்காய், சர்க்கரை கலந்து அப்படியே சாப்பிடுவதுதான் நமது வழக்கம். இந்த அவல் அற்புதமான ஒரு டிபன் அயிட்டம் என்பது தெரியுமா உங்களுக்கு? அவலை வைத்து விதம்விதமாக சமைக்கலாம். உங்களுக்காக இங்கே நான்கு Ôஅவல்Õ வெரைட்டிகள்..

அவல் புதினா கபாப்



தேவை: கெட்டி அவல் 1 கப், உருளைக் கிழங்கு 2, கார்ன்ப்ளார் 1 டேபிள் ஸ்பூன், புதினா 1 கட்டு, மல்லித்தழை 1 கைப்பிடி அளவு, இஞ்சி 1 துண்டு, பூண்டு 6 பல், பச்சை மிளகாய் 3, மாங்காய்த் (ஆம்சூர்) தூள் 1 டீஸ்பூன், மைதா 2 டேபிள் ஸ்பூன், ப்ரெட் தூள், உப்பு, எண்ணெய் தேவைக்கு.

செய்முறை: அவலைச் சுத்தம் செய்து, தண்ணீரில் அரை மணி நேரம் ஊற வையுங்கள். உருளைக் கிழங்கை வேகவைத்து தோலை நீக்கிவிட்டு உதிர்த்து வையுங்கள். புதினா, மல்லி, மிளகாய், இஞ்சி, பூண்டு ஆகியவற்றைப் பொடிப் பொடியாக நறுக்குங்கள். ஊறிய அவலை பிழிந்தெடுத்து அதனுடன் கிழங்கு, நறுக்கிய பொருட்கள், கார்ன்ப்ளார், மாங்காய்த்தூள், உப்பு சேர்த்துப் பிசையுங்கள். மைதாவுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நீர்க்கக் கரைத்து வையுங்கள். அவல் கலவையை சிறிது சிறிதாக எடுத்து, விரும்பிய வடிவத்தில் செய்து, மைதா கரைசலில் முக்குங்கள். பிறகு ப்ரெட் தூளில் புரட்டி எடுத்து சூடான எண்ணெயில் பொரித்தெடுத்தால் வேலை முடிந்தது.

இந்த அவல் புதினா கபாபை அப்படியே சாப்பிட லாம். தக்காளி சாஸ§டன் சாப்பிட்டால் கூடுதலாய் ருசிக்கும் என்பதைச் சொல்லவும் வேண்டுமா?!

அவல் கிச்சடி



தேவை: கெட்டி அவல் அரை கப், தோலுடன் கூடிய உடைத்த பாசிப் பயறு 1 கப், பெரிய வெங்காயம் 1, தக்காளி 2, பச்சை மிளகாய் 2, இஞ்சி 1 துண்டு, பூண்டு 4 பல், புதினாவும் மல்லியும் தலா 10 இலை, சோம்பு 1 சிட்டிகை, சீரகம் 1 சிட்டிகை, மஞ்சள் தூள் 1 சிட்டிகை, எண்ணெய் 1 டேபிள் ஸ்பூன், நெய் 1 டேபிள் ஸ்பூன், உப்பு தேவைக்கு.

செய்முறை: அவலை அரை மணி நேரம் நீரில் ஊற வையுங்கள். பயறை இரண்டரை கப் தண்ணீர் சேர்த்து வேகவையுங்கள். முக்கால் பதம் வெந்ததும் ஊறவைத்த அவல் (பிழிந்தெடுத்து), மஞ்சள் தூள், 1 டீஸ்பூன் நெய் ஆகியவற்றைச் சேர்த்து பத்து நிமிடம் வேக வையுங்கள்.

வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, புதினா, மல்லி ஆகியவற்றைப் பொடியாக நறுக்குங்கள். வாணலியில் எண்ணெய், மீதமுள்ள நெய்யை ஊற்றிச் சூடாக்கி, சோம்பு, சீரகத்தைத் தாளியுங்கள். அதனுடன் வெங்காயம், மிளகாய், இஞ்சி, பூண்டு, புதினா, மல்லி ஆகியவற்றைச் சேர்த்து வதக்குங்கள். பிறகு தக்காளி சேர்த்து வதக்கி அதனுடன் அவல், பயறு கலவை, தேவை யான உப்பு சேர்த்துக் கிளறி இறக்குங்கள். அவல் கிச்சடி ரெடி.

மசாலா அப்பளம், ஊறுகாயுடன் இதை சாப்பிட்டால் ஜோராக இருக்கும்.

வெண்ணெய், நெய் தவிர்த்துவிட்டு சமைத்தால் நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற மிக நல்ல உணவு இது.

அவல் பேல் பூரி


தேவை: பொரித்த அவல் 2 கப், பெரிய வெங்காயம் 1, விரல் நீள அளவு வெள்ளரிக்காய் 1, கேரட் 1, மாங்காய் 1 துண்டு, புதினா 15 இலை, மல்லி சிறிதளவு, வறுத்த வேர்க்கடலை 2 டேபிள் ஸ்பூன், வறுத்த பட்டாணி 1 டேபிள் ஸ்பூன், வறுத்த பாசிப் பயறு 2 டேபிள் ஸ்பூன், காராப்பூந்தி 2 டேபிள் ஸ்பூன், மிளகாய்த்தூள் அரை டீஸ்பூன், மிளகுத்தூள் அரை டீஸ்பூன், கறுப்பு உப்பு கால் டீஸ்பூன், உப்பு சிறிதளவு, எலுமிச்சை சாறு 1 டேபிள் ஸ்பூன்.

செய்முறை: காய்களைப் பொடியாக நறுக்குங்கள். அவலைச் சுத்தம் செய் யுங்கள். அவல், காய் மற்றும் அனைத்துப் பொருட்களையும் ஒன்றாகக் கலந்து பரிமாறுங்கள். விரும்பினால் ஒரு டேபிள் ஸ்பூன் தேன், அல்லது ஒரு டேபிள் ஸ்பூன் பொடித்த சர்க்கரையைக் கலந்து சாப்பிட லாம். கூடுதல் சுவை நாக்கைச் சொக்கவைக்கும்.

அவல் சப்பாத்தி


தேவை: கெட்டி அவல் அரை கப், கோதுமை மாவு 1 கப், சற்று புளித்த தயிர் 1 கப், மிளகாய்த்தூள் 1 டீஸ்பூன், கரம் மசாலா (விரும்பினால்) அரை டீஸ்பூன், சீரகம் அரை டீஸ்பூன், உப்பு தேவைக்கு, எண்ணெய் அல்லது நெய் தேவைக்கு.

செய்முறை: அவலைச் சுத்தம் செய்து, அதனுடன் தயிர், சிறிதளவு உப்பு சேர்த்து பிசறி ஒரு மணி நேரம் ஊறவையுங்கள். பிறகு அதனுடன் கோதுமை மாவு, மிளகாய்த் தூள், உப்பு, சீரகம், சிறிதளவு தண்ணீர் சேர்த்துப் பிசையுங்கள். இதனை சிறு சிறு உருண்டை களாக எடுத்து சப்பாத்திகளாகத் தேயுங்கள். சூடான தோசைக்கல்லில் போட்டு சுற்றிலும் எண்ணெய் அல்லது நெய் விட்டுச் சுட்டெடுங்கள்.

வழக்கமாக சப்பாத்திக்குத் தொட்டுக்கொள் ளும் அனைத்து சைடு டிஷ்களும் இதற்கும் பொருந்தும். அதிலும் குறிப்பாக கெட்டி பருப்புக் கலவை பெஸ்ட் காம்பினேஷன்.

சாண்ட்விச் டோஸ்ட்

சாண்ட்விச் டோஸ்ட்
Issue date: 13-feb-2004

மேல் நாட்டிலிருந்து வந்து நம்மைத் தொற்றிக்கொண்ட பழக்கவழக்கங்கள் எத்தனையோ. உணவு விஷயத்தில் அப்படி வந்தவற்றில் குறிப்பிடத்தக்கவை Ôசாண்ட்விச்Õ சமாசாரங்கள். இன்று நடுத்தர, சாதாரண குடும்பங்களில் கூட ÔÔகாலை டிபன் என்ன?ÕÕ என்று கேட்டால், ÔÔப்ரெட் சாண்ட்விச், ஆம்லெட்ÕÕ என்று சர்வ சாதாரண மாக வருகிறது பதில். அதிலும் வெரைட்டி தரலாமே என்றுதான் இங்கு விதவிதமாய் சாண்ட்விச்களை சொல்லியிருக் கிறேன். அப்புறம் ஒரு முக்கிய விஷயம். இவை சும்மா சாப்பிடவே பிரமாதமாக இருந்தாலும், தக்காளி சாஸைத் தொட்டுக் கொண்டால் செம ஜோர்தான்.

பாலக் டோஸ்ட்





தேவை: உப்பு ப்ரெட் ஸ்லைஸ் 6, பசலை (பாலக்) கீரை அரை கட்டு, பச்சை மிளகாய் 2, பனீர் 100 கிராம், பூண்டு 4 பல், வெண்ணெய் 1 டேபிள் ஸ்பூன், நெய் அல்லது எண்ணெய் 1 டேபிள் ஸ்பூன், உப்பு தேவைக்கு.

செய்முறை: கீரையைக் கழுவி பொடியாக நறுக்குங்கள். பனீரை உதிர்த்து வையுங்கள். பூண்டைத் தோல் நீக்கி, நசுக்கி வையுங்கள். மிளகாயை நறுக் குங்கள். வாணலியில் வெண்ணெயைப் போட்டு உருக்கி, பூண்டைச் சேர்த்து வதக்குங்கள். பிறகு மிளகாயைச் சேர்த்து சிறிது நேரம் வதக்கி, அதனுடன் கீரை, உப்பு சேர்த்து வதக்கி மூடி வையுங்கள். கீரை நன்றாக வெந்து நீர் வற்றியதும் பனீர் சேர்த்துக் கிளறி இறக்குங்கள்.


ப்ரெட் ஸ்லைஸ்களின் ஓரங்களில் இருக்கும் பிரவுன் நிறப் பகுதிகளை நீக்கிவிட்டு, ஒவ்வொரு ஸ்லைஸின் நடுவிலும் சிறிதளவு கீரைக் கலவையை வைத்து மற்றொரு ஸ்லைஸால் மூடுங்கள். கைகளில் சிறிதளவு தண்ணீர் தொட்டுக்கொண்டு ப்ரெட்டின் ஓரங்களை, கலவை வெளியேறாதபடி நன்றாக அழுத்தி, சூடான தோசைக்கல்லில் போட்டு சுற்றிலும் எண்ணெய்விட்டு இருபுறமும் திருப்பிப் போட்டு எடுங்கள்.

கீரையைத் தொட மறுக்கும் குழந்தைகள்கூட ஆர்வத்துடன் சாப்பிடும் ஐட்டம் இது.

ஸ்வீட் சாண்ட்விச்



தேவை: ஸ்வீட் ப்ரெட் 6, கேரட் 1, பாசிப் பருப்பு கால் கப், தேங்காய்த் துருவல் கால் கப், சர்க்கரை கால் கப், பனீர் 50 கிராம், ரோஸ் எசன்ஸ் சிறிதளவு, நெய் அல்லது எண்ணெய் 1 டேபிள் ஸ்பூன்.

செய்முறை: பாசிப் பருப்பை வேகவைத்து, நீரை வடித்துவிடுங்கள். கேரட்டைத் துருவுங்கள். பனீரை உதிர்த்து வையுங்கள். ப்ரெட், நெய் நீங்கலாக மற்றவற்றை ஒன்றாகச் சேர்த்துக் கலக்குங்கள்.


ப்ரெட்டின் ஓரங்களை நீக்கிவிட்டு, ஒவ்வொரு ஸ்லைஸின் மீதும் சிறிதளவு கேரட் கலவையை வைத்து மற்றொரு ஸ்லைஸால் மூடுங்கள். ஓரங்களைச் சிறிதளவு தண்ணீர் தொட்டு அழுத்தி விடுங்கள். இதனை சூடான தோசைக் கல்லில் போட்டு இருபுறமும் திருப்பிப் போட்டு வேக வையுங்கள்.


மாலை நேர டிபனாக சாப்பிட மகத்தான சமாசாரம் இந்த ஸ்வீட் சாண்ட்விச்.

ஓப்பன் சாண்ட்விச்




தேவை: உப்பு ப்ரெட் 6, முளை கட்டிய பாசிப் பயறு கால் கப், பிஞ்சு சோள மணிகள் கால் கப், பனீர் (தேவை யானால்) 50 கிராம், பசலைக் கீரை 5 இலைகள், கேரட் (சிறியதாக) 1, எலுமிச்சை சாறு 2 டீஸ்பூன், பச்சை மிளகாய் 1, பூண்டு 1 பல், உப்பு தேவைக்கு, சீஸ் (பாலாடைக் கட்டி) 1 கட்டி, வெண்ணெய் 1 டேபிள் ஸ்பூன், நெய் அல்லது எண்ணெய் 1 டேபிள் ஸ்பூன்.


செய்முறை: பூண்டு, மிளகாயை நசுக்குங்கள். பயறை ஆவியில் வேக வைத்து எடுங்கள். சோளத்தைச் சிறிதளவு உப்பு சேர்த்து வேக வைத் தெடுங்கள். பனீர், கேரட்டைத் துருவுங்கள். கீரையைக் கழுவி எடுத்து, பொடியாக நறுக்குங்கள். வெண் ணெயை லேசாக உருக்கி பூண்டு, மிளகாய் சேர்த்து வதக்குங்கள். பிறகு கீரையைச் சேர்த்து வேகும்வரை வதக்கி, கடைசியில் பயறு, கேரட் துருவல், பனீர், சோளம், எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்துக் கலக்குங்கள்.

ப்ரெட் துண்டங்களின் ஓரங்களை நீக்கிவிட்டு, ஒவ்வொரு ப்ரெட் ஸ்லைஸின் மேலும் சிறிதளவு காய்கறிக் கலவையை வைத்து அதன் மேல் துருவின சீஸைத் தூவுங்கள். இதனை சூடான தோசைக்கல்லில் வைத்து சுற்றிலும் நெய் விட்டு, மூடி போட்டு, மிதமான தீயில் ஐந்து நிமிடம் வைத்தெடுங்கள். உருகி வழியும் சீஸோடு, கமகமக்கும் சாண்ட்விச் ரெடி. சுட்டீஸ்க்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் ஃபேவரிட் இது.

ஃப்ரென்ச் டோஸ்ட்


தேவை: ஸ்வீட் ப்ரெட் ஸ்லைஸ் 6, முட்டை 2, பால் கால் கப், கார்ன் ஃப்ளார் 2 டீஸ்பூன், சர்க்கரை 6 டீஸ்பூன், வெனிலா எசன்ஸ் கால் டீஸ்பூன், நெய் 1 டேபிள் ஸ்பூன்.

செய்முறை: ப்ரெட் துண்டங்களின் ஓரங்களை நீக்கிவிட்டு ஒவ்வொன்றையும் முக்கோணமாக வெட்டி எடுத்துக் கொள்ளுங்கள். பாலில் கார்ன் ஃப்ளாரைக் கட்டியில்லாமல் கரைத்து, இதனுடன் சர்க்கரை மற்றும் வெனிலா எசன்ஸ் சேர்த்து, சர்க்கரை கரையும்வரை கலக்குங்கள். கடைசியில் முட்டையை உடைத்து ஊற்றிக் கலக்குங்கள்.

ப்ரெட் ஸ்லைஸ் ஒவ்வொன்றையும் முட்டைக் கலவை யில் முக்கியெடுத்து, சூடான தோசைக் கல்லில் போட்டு சுற்றிலும் நெய் விட்டுத் திருப்பிப் போட்டு எடுங்கள்.


சுடச்சுடச் சாப்பிடுங்கள். பிரமாதமாக இருக்கும்.

சேமியா சாண்ட்விச்





தேவை: உப்பு ப்ரெட் ஸ்லைஸ் 6, சேமியா (வறுத் தது) கால் கப், வெங்காயம் 1, கேரட் துருவல் 2 டேபிள் ஸ்பூன், பச்சைப் பட்டாணி 2 டேபிள் ஸ்பூன், தக்காளி சாஸ் 2 டேபிள் ஸ்பூன், மிளகாய்த்தூள் அரை டீஸ்பூன், சீரகம் கால் டீஸ்பூன், எண்ணெய் 1 டேபிள் ஸ்பூன், உப்பு தேவைக்கு.



செய்முறை: சேமியாவை வேகவைத்து நீரை வடித்து விடுங்கள். எண்ணெயைக் காயவைத்து சீரகம் தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்குங்கள். பிறகு கேரட், பட்டாணி, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து வதக்குங்கள். கடைசியில் சேமியா, தக்காளி சாஸ் சேர்த்துக் கிளறி இறக்குங்கள்.




ப்ரெட் ஸ்லைஸ்களின் ஓரங்களை நீக்கிவிட்டு, ஒவ்வொரு ஸ்லைஸின் நடுவிலும் சிறிதளவு சேமியா கலவையை வைத்து மற்றொரு ஸ்லைஸால் மூடுங்கள். இதனை சூடான தோசைக் கல்லில் போட்டு, சுற்றிலும் நெய் அல்லது எண்ணெய் விட்டு, இருபுறமும் திருப்பிப் போட்டு எடுங்கள். மூன்றோ நான்கோ சாப்பிட்டாலும் வயிற்றை நிரப்பிடும் டிஷ் இது.

வித்தியாசமான ருசியை விரும்புகிறவர்கள் 2 டேபிள் ஸ்பூன் சில்லி கார்லிக் சாஸ் சேர்க்கலாம். அப்போது தக்காளி சாஸ் மற்றும் மிளகாய்த்தூளைத் தவிர்த்திடுங்கள்.

செல்லக் குழந்தைகளுக்கு சத்தான உணவு வகைகள்

‘‘விதவிதமா குழம்பு வைக்கவும், பலகாரங்கள் செய்யவும் எங்களுக்கு குறிப்புகள் கொடுத்து கலக்கிட்டிருக்கீங்க. எல்லாம் சரிதான்! ஆனா, எங்களோட இன்னொரு முக்கியமான தேவையை இன்னும் நீங்க கண்டுக்கவே இல்லையே!’’ என்று வாசகிகளிடமிருந்து நமக்கு நிறைய கடிதங்கள்!
Issue Date: 25-02-05


அந்த இன்னொரு தேவை & குழந்தைகளுக்கான சத்தான உணவுகளை எப்படி தயாரிப்பது என்பது பற்றிய குறிப்புகள் தான்!


‘‘முன்னேயாவது கூட்டுக்குடித்தனம் இருந்தது! குழந்தை களுக்கு சாப்பிட என்ன தரணும்னு வழிகாட்ட தாத்தா, பாட்டினு பெரியவங்க இருந்தாங்க. இப்போ நிறைய தனிக்குடித்தனங்கள் வந்தாச்சு. வாண்டுகளுக்கு என்ன மாதிரி உணவு கொடுத்தா ஆரோக்கியமா வளருவாங்கனு தெரியாம என்னைப் போல பல இளம் அம்மாக்கள் தடுமாறிட்டிருக்காங்க’’ என்று விரிவாகவே கடிதம் எழுதியிருந்தார் ஒரு வாசகி.

இப்படியரு கடித படையெடுப்புக்கு பிறகுமா நம்மால் சும்மா இருக்கமுடியும்?

குழந்தைகளுக்கான உணவில் என்னவெல்லாம் இருந்தால் அது ஊட்டமாக இருக்கும் என்று ஊட்டச் சத்து நிபுணரான ஷைனி சந்திரனிடம் விசாரித்தோம். ‘‘நாம் மிக சாதாரணமாக நினைக்கும் அவல், எள், பசலைக்கீரை போன்ற பொருள்களிலெல்லாம் குழந்தைக்குத் தேவையான சத்துக்கள் நிரம்பியிருக்கின்றன’’ என்று தொடங்கி, தகவல்களை ஷைனி அடுக்க, அதையெல்லாம் அப்படியே ‘சமையல் திலகம்’ ரேவதி சண்முகத்திடம் நாம் விவரித்தோம். ‘‘ரொம்ப நல்லதா போச்சு. இந்த பொருட்களை வெச்சு சுவையான ரெசிபிக்களை கொடுத்து நான் அசத்திடறேன்’’ என்று உடனடியாக களமிறங்கிவிட்டார் அவர்.


விளைவு, அற்புதமாக மலர்ந்திருக்கிறது இந்தத் தொகுப்பு!


ரேவதி சண்முகம் & ஷைனி சந்திரன் கூட்டணியில் உருவாகியிருக்கும் இந்த ரெசிப்பிகள், இரண்டு வயதிலிருந்து ஐந்து வயது வரையிலான குழந்தைகளுக்கானது. ஒவ்வொரு உணவிலும் என்ன சத்து உள்ளது என்ற ஷைனியின் கமென்ட்டையும் கூடவே தந்திருக்கிறோம். போனஸாக, அடம்பிடிக்கும் குழந்தைகளையும் சுலபமாக சாப்பிட வைக்க, சில அவசியமான டிப்ஸ்களையும் தந்திருக்கிறார் ஷைனி.

உங்கள் செல்லக் குழந்தைகளுக்காக ‘அவள்’ தரும் ஆரோக்கிய பரிசு இது!




சத்துமாவு கஞ்சி



கஞ்சி தயாரிப்பது பற்றி சொல்லும் முன்பு, அதற்கான சத்து மாவு தயாரிப்பது பற்றி பார்த்து விடுவோம்.



தேவையானவை:

புழுங்கலரிசி - 100 கிராம், புட்டரிசி - 100 கிராம், பொட்டுக்கடலை - 100 கிராம், உளுத்தம்பருப்பு - 100 கிராம், ஜவ்வரிசி - 50 கிராம், பாசிப்பயறு - 100 கிராம், கொள்ளு - 50 கிராம், ராகி - 200 கிராம், கம்பு - 100 கிராம், வெள்ளை சோளம் - 100 கிராம், மக்காச்சோளம் - 100 கிராம், வெள்ளை சோயா - 100 கிராம், பார்லி - 100 கிராம், பாதாம் - 50 கிராம், முந்திரி - 50 கிராம், வேர்க்கடலை - 100 கிராம், சம்பா கோதுமை - 200 கிராம், பாசிப்பருப்பு - 100 கிராம், ஏலக்காய் - 25 கிராம்.

செய்முறை: அரிசி, பொட்டுக்கடலை, ஜவ்வரிசி, பாதாம், முந்திரி, பார்லி, வேர்க்கடலை, மக்காச்சோளம், ஏலக்காய் தவிர்த்து, மற்ற பொருள்கள் எல்லாவற்றையும் ஒன்றாக ஊறவையுங்கள். மக்காச்சோளத்தை மட்டும் தனியே ஊறவையுங்கள். இரவு முழுவதும் தானியங்கள் ஊறவேண்டும். மறுநாள் காலையில், தண்ணீரை வடித்துவிட்டு, தானியங்களை ஒரு துணியில் கட்டி வைத்துவிடுங்கள். அன்று முழுதும் தானியங்கள் துணியிலேயே இருக்கட்டும். அவ்வப்போது தண்ணீர் தெளித்துவிடுங்கள். அடுத்த நாள் (அதாவது, இரண்டாம் நாள்) பிரித்தால், தானியங்களிலிருந்து நன்கு முளை வந்திருக்கும். அன்று முழுவதும் நிழல் காய்ச்சலாக தானியங்களைக் காயவையுங்கள். நன்கு காய்ந்ததும், அவற்றை வெறும் வாணலியில் சிறிது சிறிதாக போட்டு, சிறு தீயில் வாசனை வரும்வரை வறுத்தெடுங்கள். முதலில் ஊறவைக்காமல் தனியாக எடுத்துவைத்த அரிசி, பொட்டுக்கடலை போன்ற பொருள்களையும் வறுத்து வையுங்கள். பார்லியை வறுக்க வேண்டாம். வறுத்த பொருள்களோடு ஏலக்காய் கலந்து, மெஷினில் கொடுத்து நன்கு அரைத்து வைத்துக்கொள்ளுங்கள் (சலிக்கத் தேவையில்லை). சத்துமாவு கஞ்சிக்கு, இந்த மாவிலிருந்து ஒரு டேபிள் ஸ்பூன் எடுத்து, ஒரு கப் பாலில் கட்டியில்லாமல் நன்கு கரைத்து, சர்க்கரை சேர்த்துக் காய்ச்சுங்கள். இரண்டு நிமிடங்கள் கொதித்துப் பொங்கியதும், ஆற்றிக் குழந்தைகளுக்குக் கொடுங்கள்.


ஷைனியின் கமென்ட்...

குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்குத் தேவையான
அனைத்து சத்துக்களும் நிறைந்த முழுமையான உணவு இது. காலை உணவு சாப்பிட முடியாத அவசரத்தில் இதை
ஒரு கப் குடித்தால் போதும்.






தானிய லட்டு




தேவையானவை:

சத்து மாவு (தயாரிப்பு முறை முன்பக்கத்தில்) & 1 கப், பொடித்த சர்க்கரை & 1 கப், நெய் & தேவைக்கு.


செய்முறை:


பொடித்த சர்க்கரையை கட்டிகள் இல்லாமல், சலித்துக் கொள்ளுங்கள். இதை, சத்துமாவுடன் நன்கு கலந்து கொள்ளுங்கள். நெய்யை சற்று சூடாக்கி, மாவு & சர்க்கரைக் கலவையில், சிறிது சிறிதாக ஊற்றி, கலந்துகொண்டே வாருங்கள். மாவை உருண்டை பிடித்துப் பார்த்தால், உதிராமல் இருக்க வேண்டும். அதுதான் சரியான பக்குவம். அந்தப் பக்குவம் வந்ததும், நெய் சேர்ப்பதை நிறுத்திவிட்டு, உருண்டைகளாகப் பிடித்து வையுங்கள்.



ஷைனியின் கமென்ட்...
சுவையான இந்த தானிய லட்டில் இரும்புச்சத்தும் புரதச்சத்தும் நிரம்பியிருப்பதால், குழந்தைகளின்
வளர்ச்சிக்கு உகந்தது.

பீட்ரூட் கீர்
தேவையானவை:

பீட்ரூட் & 1, பால் & 1 லிட்டர், முந்திரி & 8, பாதாம் & 8, சர்க்கரை & அரை கப், பச்சைக் கற்பூரம் & 1 சிட்டிகை, ஏலக்காய்த் தூள் & கால் டீஸ்பூன், கன்டென்ஸ்டு மில்க் & 3 டேபிள் ஸ்பூன், சாரைப் பருப்பு & 1 டேபிள் ஸ்பூன்.

செய்முறை:



பீட்ரூட்டைக் கழுவி, தோல் சீவி, துண்டுகளாக நறுக்குங்கள். அதோடு இரண்டு கப் தண்ணீர், முந்திரி, பாதாம் சேர்த்து, குக்கரில் இரண்டு விசில் வைத்து இறக்குங்கள். பாலை, முக்கால் பாகமாக குறையுமளவுக்குக் காய்ச்சி, அதில் சர்க்கரை சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கி, ஆறவிடுங்கள்.

பின்னர், குக்கரைத் திறந்து, பாதாமை எடுத்துத் தோல் நீக்குங்கள். அத்துடன், பீட்ரூட், முந்திரி, ஏலக்காய்த்தூள், கன்டென்ஸ்டு மில்க், பச்சைக் கற்பூரம் சேர்த்து, மிக்ஸியில் மைய அரையுங்கள். அரைத்த இந்த விழுதை காய்ச்சி வைத்த பாலுடன் சேர்த்துக் கலக்கி, சாரைப்பருப்பு தூவி, குளிரவைத்துக் குழந்தைகளுக்கு கொடுத்தால்... கலர்ஃபுல் கீர், கண் இமைப்பதற்குள் காலியாகிவிடும்.

குறிப்பு: கேரட்டையும் இதே முறையில் கீர் செய்யலாம். ஆரஞ்சு நிறத்தில் அது அசத்தும்!


ஷைனியின் கமென்ட்...
பீட்ரூட்டில் உள்ள தாது உப்பும் பாலில் உள்ளபுரதமும் கால்சியமும் வலுவான எலும்புகளும் பற்களும் வளரத் துணைபுரிகின்றன. ரத்தம் உறைவதற்கும் உதவுகிறது.

ட்ரை ஃப்ரூட் மில்க் ஷேக்
தேவையானவை:


பேரீச்சம்பழம் (கொட்டை நீக்கியது) & 10, பால் & 2 கப், பாதாம் & 4, முந்திரி & 4, அக்ரூட் & 1 டேபிள் ஸ்பூன், தேன் & 1 டேபிள் ஸ்பூன்.


செய்முறை:

கால் கப் கொதிக்கும் நீரில் பாதாமை ஐந்து நிமிடம் போட்டு எடுத்து, தோலை நீக்கிக்கொள்ளுங்கள். பாலை நன்கு காய்ச்சி இறக்கிவிட்டு, சூடாக இருக்கும்போதே அதில் பேரீச்சம்பழம், பாதாம், முந்திரி, அக்ரூட் ஆகியவற்றை ஊறவிடுங்கள். நன்கு ஊறியதும் (பால் ஆறியதும்), தேன் சேர்த்து மிக்ஸியில் நன்கு அடித்து, குளிரவைத்துக் குழந்தைகள் கையில் கொடுங்கள். சுவைத்துப் பார்த்து குதூகலிப்பார்கள்.


ஷைனியின் கமென்ட்...
இந்த மில்க் ஷேக்கில் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. குழந்தைகளுக்கு கூர்ந்து கவனிக்கும் திறனையும், புதிய விஷயங்களைக் கிரகிக்கும் திறனையும் இது அதிகப்படுத்துகிறது.

கார்ன்ஃபிளேக்ஸ் மில்க் ஷேக்
தேவையானவை:


பால் & 2 கப், கார்ன்ஃபிளேக்ஸ் & 2 டேபிள் ஸ்பூன், மலை வாழைப்பழம் (சிறியது) & 1 (அல்லது) பச்சைப்பழம் & பாதி, மில்க் பிஸ்கெட் & 2, சர்க்கரை & 3 டீஸ்பூன்.




செய்முறை: பாலைக் காய்ச்சி, அதில் சர்க்கரை, கார்ன்ஃபிளேக்ஸ், பிஸ்கெட் சேர்த்து, நன்கு ஊறவிடுங்கள். ஆறியதும், வாழைப்பழத்தை சிறு துண்டுகளாக்கி பாலுடன் சேர்த்து, மிக்ஸியில் சில நொடிகள் அடித்து, நன்கு குளிரவைத்து, பரிமாறுங்கள்.



ஷைனியின் கமென்ட்...
வாழைப்பழத்தில் உள்ள பொட்டாஷியம், வைட்டமின் பி6, பாலின் புரதம், கார்ன்ஃபிளேக்ஸின் மாவுச்சத்து ஆகியன, குழந்தைகளுக்கு அபரிமிதமான சக்தியை அளிக்கின்றன. நரம்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கும் பொதுவான வளர்ச்சிக்கும் இது ஏற்றது.

கீரை கட்லெட்
தேவையானவை:

உருளைக் கிழங்கு & 4, பசலைக் கீரை & 1 கட்டு, பச்சை மிளகாய் & 2, இஞ்சி & 1 துண்டு, பூண்டு & 2 பல், சீஸ் (துருவியது) & அரை கப், மைதா & கால் கப் (அல்லது) பிரெட் ஸ்லைஸ் & 3, பிரெட் தூள் & தேவையான அளவு, எலுமிச்சம்பழச்சாறு & 1 டேபிள்ஸ்பூன், கார்ன்ஃப்ளார் & கால் கப், உப்பு, எண்ணெய் & தேவைக்கு.


செய்முறை:


உருளைக் கிழங்கை வேகவைத்து, தோலுரித்து, கட்டிகள் இல்லாமல் மசித்துக் கொள்ளுங்கள். கீரையை சுத்தம் செய்து அதனுடன் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து நைஸாக அரையுங்கள். இந்த விழுதை, மசித்த கிழங்குடன் சேருங்கள். அத்துடன் மைதா அல்லது உதிர்த்த பிரெட் ஸ்லைஸ், எலுமிச்சம்பழச் சாறு, உப்பு, துருவிய சீஸ் சேர்த்து, நன்கு பிசைந்துகொள்ளுங்கள்.

பின்னர், கார்ன்ஃப்ளார் மாவை நீர்க்கக் கரையுங்கள். உருளைக்கிழங்கு கலவையிலிருந்து சிறிதளவு எடுத்து, வேண்டிய வடிவத்தில் கட்லெட் செய்து, கார்ன்ஃபிளார் மாவில் நனைத்து எடுத்து, பிரெட் தூளில் புரட்டி எடுத்து, எண்ணெயில் பொரித்தெடுங்கள்.

குறிப்பு: எண்ணெய் நன்கு காய்ந்திருக்க வேண்டும். ஆனால், புகையக் கூடாது. பசலைக் கீரைக்கு பதிலாக, புதினா, மல்லித்தழை ஆகியவற்றையும் பாதி, பாதி எடுத்து, அரைத்தும் இந்த கட்லெட்டை செய்யலாம்.


ஷைனியின் கமென்ட்...
கீரையில் இருக்கும் பீட்டா கரோடின், நார்ச்சத்து,
பாஸ்பரஸ், கால்சியம் போன்றவை வயிற்றுக்கு ஆரோக்கியமானது. நோய் எதிர்ப்பு சக்தியையும் வளர்க்கும். தெளிவான கண்பார்வைக்கும் உதவும்.

சீஸ் ஸ்டிக்ஸ்
தேவையானவை:


மைதா & 1 கப், சீஸ் துருவல் & கால் கப், சீஸ் க்யூப்ஸ் & 3, மிளகுத்தூள் & அரை டீஸ்பூன், பேக்கிங் பவுடர் & 2 சிட்டிகை. நெய் & ஒன்றரை டேபிள் ஸ்பூன், உப்பு & சிறிதளவு, எண்ணெய் & தேவைக்கு.




செய்முறை:

மைதாவுடன் பேக்கிங் பவுடர், மிளகுத்தூள், தேவையான அளவு உப்பு, துருவிய சீஸ் சேர்த்து நன்கு பிசைந்துகொள்ளுங்கள். பிசைந்த மாவை சிறிய பூரிகளாக இடுங்கள். சீஸ் க்யூப்களை எடுத்துத் துருவி, பூரி மேல் தூவுங்கள். அதை மற்றொரு பூரியால் மூடி, பாய் சுருட்டுவது போல் சுருட்டிக் கொள்ளுங்கள். எண்ணெயைக் காயவைத்து பொரித்தெடுங்கள்.

பல் ‘துறுதுறு’வெனும் பிள்ளைகளுக்குக் கடிப்பதற்கு ஏற்ற ஸ்நாக்ஸ் இது. குழந்தையின் ஆரோக்கியத்துக்கும் ஏற்ற சத்தான ஸ்டிக்ஸ்!



ஷைனியின் கமென்ட்...
சுலபமாக செய்யக்கூடிய இந்த சீஸ் ஸ்டிக்ஸில், கால்சியமும் புரதமும் நிறைந்துள்ளன. இவை எலும்பு மற்றும் பல் வளர்ச்சி, ரத்தம் உறைதல் ஆகியவற்றுக்கு உதவும். நரம்பு மண்டலத்தை உஷார் நிலையில் வைத்திருக்கவும் உதவும்.

ட்ரை ஃப்ரூட்ஸ் பால்ஸ்
தேவையானவை:

பேரீச்சம்பழம் (கொட்டை நீக்கியது) & 20, பாதாம் & 15, முந்திரி & 15, கொப்பரை (பொடியாக நறுக்கியது) & 2 டேபிள் ஸ்பூன், அக்ரூட் & 2 டேபிள் ஸ்பூன், கொப்பரைத் துருவல் (தேவையானால்) & அரை கப்.


செய்முறை:

பேரீச்சம்பழம், பாதாம், அக்ரூட்டை மிகச் சிறிய துண்டுகளாக நறுக்குங்கள். கொப்பரைத் துருவல் நீங்கலாக, மற்றவற்றை ஒன்றாகக் கலந்து, நன்றாகப் பிசைந்து சிறு உருண்டைகளாக உருட்டுங்கள். உருட்டிய பின், தேவையானால் உருண்டைகளை கொப்பரைத் துருவலில் புரட்டியெடுங்கள்.


ஷைனியின் கமென்ட்...
இந்த ட்ரை ஃப்ரூட்ஸ் உருண்டைகளில் நிறைந்திருக்கும் இரும்புச்சத்தும் கொழுப்புச்சத்தும், குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு மிகவும் நல்லது.

சீதாப்பழ மில்க் ஷேக்
தேவையானவை:

சீதாப்பழம் (நடுத்தர அளவு) & 2, காய்ச்சிய பால் & 3 கப், சர்க்கரை & 4 டீஸ்பூன், ஃப்ரெஷ் க்ரீம் & 2 டேபிள் ஸ்பூன்.

செய்முறை:

சீதாப்பழத்தை இரண்டாக உடைத்து, அதிலிருக்கும் சதைப்பகுதியை ஸ்பூனால் வழித்து கிண்ணத்தில் போடுங்கள். அடுத்து, அதை கையால் பிசைந்து விதைகளை நீக்குங்கள் (ஹேண்ட் மிக்ஸர் இருந்தால், அதன் உதவியுடன் விதைகளை நீக்கலாம்). அதனுடன் பால், சர்க்கரை சேர்த்து, மிக்ஸியில் சில நிமிடங்கள் அரைத்தெடுங்கள். கடைசியில் ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்து, மீண்டும் மிக்ஸியில் போட்டு, விப்பர் பட்டனை உபயோகித்து ஒரு நொடி அடித்து, நிறுத்துங்கள். பின்னர், குளிரவைத்துக் குழந்தைகளுக்குக் கொடுங்கள்.

குறிப்பு: சப்போட்டா, ஆப்பிள், மாம்பழம், பட்டர் ஃப்ரூட் ஆகிய பழங்களிலும் இதே முறையில் செய்யலாம். கலர்ஃபுல்லாக இருக்கும். குழந்தைகள் விரும்பி அருந்துவார்கள். ஃப்ரெஷ் க்ரீமுக்குப் பதிலாக, பால் ஏடும் உபயோகிக்கலாம்.






ஷைனியின் கமென்ட்...
‘பழம் சாப்பிடமாட்டேன்’ என அடம்பிடிக்கும் குழந்தைகளைச் சாப்பிடவைக்க உதவுவதுடன், இந்த மில்க் ஷேக்கில் உள்ள வைட்டமின்களும் தாதுக்களும் உடலுக்கு வலுவையும் உறுதியையும் தரும்.

க்ரீன் சப்பாத்தி
தேவையானவை:

கோதுமை மாவு & 2 கப், வேகவைத்த பட்டாணி & அரை கப், புதினா & அரை கட்டு, மல்லித்தழை & அரை கட்டு, பச்சை மிளகாய் & 2, உப்பு & தேவைக்கு, நெய் & 1 டீஸ்பூன், சீரகத்தூள், கரம் மசாலா தூள் & தலா அரை டீஸ்பூன், எண்ணெய் & தேவைக்கு, நெய் & சிறிதளவு.





செய்முறை:

புதினா, மல்லித்தழையை சுத்தம் செய்து, பச்சை மிளகாயுடன் சேர்த்து, நைஸாக அரைத்துக்கொள்ளுங்கள். அரைத்த விழுதுடன், கோதுமை மாவு, நெய், கரம் மசாலா, சீரகத்தூள், உப்பு, தேவையான தண்ணீர் சேர்த்து நன்கு (சற்று இளக்கமாக) பிசைந்து கொள்ளுங்கள்.

பிசைந்த மாவிலிருந்து சிறிதளவு எடுத்து, சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, சிறிய சப்பாத்திகளாக இட்டு, தோசைக்கல்லில் சுட்டு, எண்ணெய் அல்லது நெய் தடவுங்கள். சைட் டிஷ் உடன் பரிமாறுங்கள்.


குறிப்பு: கேரட்டை உபயோகித்தும் இதைச் செய்யலாம். கேரட்டைத் துருவி, அதனுடன் சிறிது மிளகாய்த் தூள், கரம் மசாலா, உப்பு, சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து நன்கு அரைத்து, கோதுமை மாவுடன் சேர்த்துப் பிசைந்து சப்பாத்தி இட வேண்டும். ஆரஞ்சு வண்ண சப்பாத்தி ரெடி!


ஷைனியின் கமென்ட்...
க்ரீன் சப்பாத்தியில் உள்ள பீட்டா கரோடின்
மற்றும் வைட்டமின் பி ஆகியன, நோய் எதிர்ப்பு
சக்தியை அதிகரிக்கும். சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவும்.

பேரீச்சம்பழ தயிர் பச்சடி
தேவையானவை:

புளிக்காத தயிர் & 2 கப், பேரீச்சம்பழம் (கொட்டை நீக்கியது) & 10, முந்திரி & 8, மாதுளை முத்துக்கள் & கால் கப், ஃப்ரெஷ் க்ரீம் & கால் கப் (அல்லது பால் ஏடு சிறிதளவு), மிளகுத்தூள் & அரை டீஸ்பூன், உப்பு & சிறிது, சர்க்கரை & அரை கப்.


செய்முறை:

தயிரை நன்கு வடிகட்டுங்கள். முந்திரியையும், பேரீச்சம்பழத்தையும் பொடியாக நறுக்குங்கள். தயிருடன் ஃப்ரெஷ் க்ரீம் (அல்லது) பால் ஏடு, முந்திரி, பேரீச்சம்பழம், மாதுளை, மிளகுத்தூள், உப்பு, சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து, கலர்ஃபுல்லான கிண்ணத்தில், ஸ்பூனுடன் கொடுங்கள். சில விநாடிகளிலேயே ‘ஒன்ஸ்மோர்’ என உங்கள் மழலையின் குரல் கேட்கும்.









ஷைனியின் கமென்ட்...
விசேஷமான இந்த பேரீச்சம்பழ தயிர் பச்சடியில் நிரம்பியிருக்கும் புரதமும், இரும்புச்சத்தும், குழந்தைகளுக்கு ரத்தசோகை வராமல் தடுக்கின்றன.

அவல் பொரி உருண்டை
தேவையானவை: அவல் பொரி & 2 கப், பொட்டுக் கடலை & கால் கப், எள் & கால் கப், தேங்காய் (பல், பல்லாகக் கீறியது) & கால் கப், நெய் & 1 டேபிள்ஸ்பூன், வெல்லம் (பொடித்தது) & முக்கால் கப்.


செய்முறை:

எள்ளை வெறும் கடாயில் வறுத்துக்கொள்ளுங்கள். நெய்யைக் காயவைத்து, தேங்காயைப் பொன்னிறமாக வறுத்துக்கொள்ளுங்கள். அவல், பொட்டுக்கடலை, எள்,தேங்காய் எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்துகொள்ளுங்கள். வெல்லத்தில் கால் கப் தண்ணீர் சேர்த்து, அடுப்பில் வைத்து, வெல்லம் கரைந்ததும் இறக்கி, வடிகட்டுங்கள். மீண்டும் அடுப்பில் வைத்துக் கொதிக்க விடுங்கள். கெட்டிப் பாகு பதம் வந்ததும் இறக்கி, அதில் அவல் கலவையைக் கொட்டி, நன்கு கிளறி, சிறு சிறு உருண்டைகளாகப் பிடியுங்கள்.

குறிப்பு: பாகுக்கான பதம் அறிய... சிறிதளவு தண்ணீர் உள்ள தட்டில் ஒரு ஸ்பூன் அளவு பாகை விட்டு, அதை உருட்டி எடுத்துப் பாத்திரத்தில் போட்டுப் பார்த்தால் ‘டங்’கென்ற சத்தம் வரவேண்டும்.


ஷைனியின் கமென்ட்...
அவலிலும் வெல்லத்திலும் இரும்புச்சத்து செறிந்துள்ளது. எள்ளில் கால்சியம் மிகுந்துள்ளது. உடலுக்குத்
தேவையான இ.எஃப்.ஏ.(எஸென்ஷியல் ஃபேட்டி ஆசிட்ஸ்) உள்ளதால், இந்த அவல் பொரி உருண்டை
ஒரு முழுமையான சிற்றுண்டியாகும்.

சப்பாத்தி ரோல்ஸ்
தேவையானவை:


கோதுமை மாவு & 2 கப், நெய் & 2 டீஸ்பூன், உப்பு & தேவைக்கு. ரோல் செய்ய: பனீர் & 200 கிராம், (உருளை, கேரட், பீன்ஸ் போன்ற) காய்கறி கலவை & 1 கப், கரம் மசாலா & 1 டீஸ்பூன், மிளகாய்த் தூள் & 1 டீஸ்பூன், மல்லித்தழை & 1 டேபிள்ஸ்பூன், பிரெட் ஸ்லைஸ் & 2, உப்பு & தேவையான அளவு, கார்ன்ஃப்ளார் & சிறிது, எண்ணெய் & பொரிக்கத் தேவையான அளவு.


செய்முறை:

கோதுமை மாவுடன் நெய், உப்பு, தேவையான தண்ணீர் சேர்த்து, மிருதுவாகப் பிசையுங்கள். பனீரைத் துருவுங்கள். காய்கறிகளை உப்பு சேர்த்து வேகவைத்து, மசித்துக் கொள்ளுங்கள். அத்துடன் பனீர், மிளகாய்த் தூள், கரம் மசாலா, உப்பு, மல்லித்தழை, உதிர்த்த பிரெட் ஸ்லைஸ் ஆகியவற்றை சேர்த்து நன்கு பிசையுங் கள். இதைச் சற்று தடிமனாக (இரண்டு விரல் கனத்துக்கு), நீள உருண்டையாக உருட்டுங்கள். கார்ன்ஃப்ளாரை நீர்க்கக் கரைத்து, உருட்டிய ரோல்களை அதில் நன்றாக நனைத்து, பிரெட் தூளில் புரட்டியெடுங்கள். பின்னர் எண்ணெயைக் காயவைத்து, அதில் பொரித்தெடுங்கள்.

அதன்பின், பிசைந்த மாவிலிருந்து நெல்லிக்காயளவு உருண்டைஎடுத்து, சிறிய சப்பாத்திகளாகத் திரட்டுங்கள். தோசைக்கல்லில் எண்ணெய் தடவி இந்த சிறு சப்பாத்திகளைச் சுட்டு, ஒவ்வொரு சப்பாத்தியிலும் மேலே சொன்ன ரோல்ஸை வைத்துச் சுருட்டி, பல் குத்தும் குச்சியால் குத்திவிடுங்கள் (சாப்பிடும்போது இதை எடுத்துவிட மறக்காதீர்கள்). சாஸ§டன் பரிமாற... சற்று நேரத்தில் காலியாகும்.



ஷைனியின் கமென்ட்...
இந்த சப்பாத்தி ரோல்ஸில் புரதம், வைட்டமின்,
நார்ச்சத்து அனைத்தும் உள்ளன. உங்கள் குழந்தையை சுறுசுறுப்பாகவும் துறுதுறுப்பாகவும் வைத்திருக்க
இந்தச் சத்துக்கள் அவசியம் தேவை.


சுலபமாக சாப்பிட வைக்கலாம்!

‘‘என் குழந்தையா? லேசிலே சாப்பிடாது! சாப்பிட வைக்கிறதுக்கு நான் படுற அவஸ்தை இருக்கே... அம்மம்மா!’’ என்று அலுத்துக் கொள்ளும் தாய்மார்களுக்கு, குழந்தைகளுக்கு சாப்பாடு ஊட்டுவதை இனிய அனுபவமாக்க இங்கே சில டிப்ஸ் தருகிறார் ஊட்டச்சத்து நிபுணர் ஷைனி சந்திரன் (ஆரோக்கிய டிப்ஸ் போனஸ்!).

குழந்தைகளுக்கு ஒரே சமயத்தில் எல்லாவற்றையும் சாப்பிடக் கொடுக்காதீர்கள். குறிப்பிட்ட முறையான இடைவெளிகளில், கொஞ்சம் கொஞ்சமாக உணவு கொடுங்கள். குழந்தைக்கு திகட்டாமல் இருக்கும்.


குழந்தை சாப்பிடக்கூடிய அளவுக்கு மேல் ஒருபோதும் வைத்துத் திணிக்காதீர்கள். இப்படிச் செய்வதால், அந்தக் குழந்தை வளர்ந்து பெரியவள்(ன்) ஆகும்போது, சாப்பாட்டையே ‘வேண்டாம்’ என்று ஒதுக்கித் தள்ளவும் கூடும்.

பெரும்பாலான வீடுகளில், காலை நேரத்தில் குழந்தைகள் பள்ளிக்குக் கிளம்பும் அவசரத்தில், வாசலில் ஆட்டோ டிரைவர் ‘பாம் பாம்’ என ஹாரனை அலறவிட, டென்ஷனின் உச்சியில் இருக்கும் அம்மாக்கள், ‘ம்... முழுங்கித் தொலை!’ என்ற அர்ச்சனையோடு, இட்லியையோ, தோசை யையோ குழந்தையின் வாயில் திணித்து, விழிபிதுங்க வைப்பார்கள். இது ரொம்பவே தப்பு.

சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது குழந்தை களை அவசரப்படுத்தவே கூடாது. உணவு உண்ணும் நேரம் அவர்களுக்குச் சந்தோஷமான நேரமாக இருக்க வேண்டும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

தான் ஊட்டினால்தான் தன் குழந்தை சாப்பிடும் என்று சில தாய்மார்கள் பெருமை பொங்க சொல்வார்கள். ஆனால், அது பெருமைப்பட வேண்டிய விஷயம் இல்லை.




இரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு ஊட்டவே கூடாது. மற்றவர்களோடு அமர்ந்து, அவர்களாகவே சாப்பிட விடவேண்டும். சாப்பாட்டை மேலே, கீழே இறைத்தாலும், குழந்தைகள் வயிறு நிறைய சாப்பிடுவார்கள்.

பழங்கள், காய்கறிகள், முழு பயறு வகைகள், பருப்பு வகைகளில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. குழந்தைகளுக்கு மலச்சிக்கல் வராமல் இவை தடுக்கும்.


ஒரு நாளைக்கு ஒரு லிட்டர் தண்ணீராவது குழந்தைகளை அருந்த வையுங்கள். வெறும் தண்ணீராகக் குடிக்க அவர்களுக்குப் பிடிக்கவில்லை என்றால், பழச்சாறாகவோ, பானகமாகவோ, மோராகவோ, மில்க் ஷேக்குகளாகவோ, இளநீராகவோ கொடுக்கலாம்.

‘காய்கறிகளை சாப்பிடவே மாட்டேன் என்கிறார்களே?’ என்பவர்களின் கவனத்துக்கு... காய்களை அப்படியே கொடுக்காமல், சாண்ட்விச்சு களாகவோ, காய் நூடுல்ஸாகவோ, ஃப்ரைட் ரைஸாகவோ கொடுங்கள். பட்டாணியை வேக வைத்து மசித்தோ, கேரட், பீட்ரூட் போன்றவற்றைத் துருவி தூவியோ, உங்கள் அயிட்டங்களை கலர்ஃபுல்லாக பரிமாறுங்கள். அப்புறம் பாருங்கள், சந்தோஷமாகச் சாப்பிடுவார்கள்.

ஒரே பழத்தை முழுதாகக் கொடுப்பதைவிட, பல பழங்களை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, பால், தேன் கலந்து சாலட்டாகவோ, மில்க் ஷேக்குகளாகவோ கொடுத்தால் வைட்டமின், மினரல், நார்ச்சத்து எல்லாம் ஒரே உணவில் அவர்களுக்குக் கிடைக்கும்.

குழந்தைகளை வெளியே அழைத்துச் செல்லும்போதோ, அல்லது அவர்கள் கேட்கிறார் கள் என்றோ தயவுசெய்து, செயற்கையான மணம், நிறம் சேர்க்கப்பட்ட தின்பண்டங்களை வாங்கித் தராதீர்கள். ஒரு முறை சாப்பிட்டால், அதற்கே அடிமையாகும் அளவுக்கு அப் பண்டங்களில் செயற்கை ரசாயனங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. உங்கள் குழந்தைகளின் பஞ்சு போன்ற வயிற்றைப் பதம் பார்த்து, அவர்களுக்குப் பசியே எடுக்கவிடாமல் அவை செய்துவிடும்.

நீண்ட நாள் பேக் செய்யப்பட்ட தின்பண்டங்களும் வேண்டாமே! செயற்கை நிறம், மணமூட்டப்பட்ட பொருள்களும், பேக் செய்யப்பட்ட தின்பண்டங்களும் உங்கள் செல்லங்களின் விட்டமின் சத்துக்களை உறிஞ்சுவதோடு, அவர்களின் நடவடிக்கைகளையே மாற்றுகிறது. ‘ஹைபர் ஆக்டிவிடி’ எனப்படும் (அதிவேக செயல்பாடு உடைய) இயல்பும்கூட இதனால் உண்டாவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

காபி, டீ, குளிர் பானங்கள் போன்றவை குழந்தைகளின் முழு சிஸ்டத்தையே குலைக்கக் கூடியவை. தவிர்த்து விடுங்களேன்!

சிலர், ‘பால் குடிக்கமாட் டேங்கிறான்’ என்று கூறி, சில துளிகள் டிக்காஷன் விட்டுக் கொடுப்பார்கள். குளிர்பானத்தை ஃபீடிங் பாட்டிலில் ஊற்றிக் கொடுப்போரும் உண்டு. இவை ரொம்ப தப்பான விஷயங்கள்.

எந்த உணவிலும் முடிந்தவரை ஜீனியைத் தவிர்த்துவிட்டு, பனை வெல்லம், நாட்டு சர்க் கரை, கருப்பட்டி போன்ற வற்றைச் சேர்த்துக் கொடுத்துப் பழக்குங்கள். அவ்வளவும் இரும்புச் சத்து! இல்லையெனில், இயற்கையே நமக்குத் தந்திருக்கும் அற்புத இனிப்பான தேன் சேர்க்கலாம்.

செலவைப் பார்க் காமல், பல நிறங்களில், பல வடிவங்களில், பிளேட்டுகள், கிண்ணங் கள், ஸ்பூன்கள் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். தினமும் ஒரே தட்டில் போட்டுக் கொடுப்பதுகூட, குழந்தைகளுக்கு அலுப்பூட்டும். ‘தோ பார்றா கண்ணா, மிக்கி மவுஸ் ஷேப் பிளேட்டுல பப்பு மம்மு’ என்றோ, ‘எங்க செல்லத்துக்கு இன்னிக்கு ஸ்டார் ஷேப் பிளேட்டுலதான் டிபனாம். உங்க யாருக்கும் கிடையாது’ என்றோ சொல்லிப் பாருங்கள். பிளேட்டின் மேலுள்ள கவர்ச்சி, கிடுகிடுவென உணவை உள்ளே இழுக்கும்.

தோசை, சப்பாத்தி, பூரி, இட்லி போன்ற டிபன்களின் வடிவங்களையும் உங்கள் கற்பனைக்கேற்ப, குழந்தையின் விருப்பத்துக்கு ஏற்ப மாற்றலாமே! பிறை நிலா வடிவில் தோசை, பூ டிசைனில் சப்பாத்தி, சதுரக் கேக்குகளாக இட்லி என்று வேளைக்கு ஒன்றாக அசத்தினால், எந்தக் குழந்தை சாப்பிட அடம்பிடிக்கும்?


உடல்நிலை சரியில்லாத குழந்தைகளுக்கு, நீர்க்க இருக்கும் சூப் அல்லது ரசம் பிசைந்த சாதம், வேகவைத்த காய் என சீக்கிரம் செரிக்கும் உணவுகளைக் கொடுங்கள். காரம், மசாலா வேண்டாம். தண்ணீர் நிறையக் கொடுக்கலாம். அப்போது தான் மாத்திரை, மருந்தினால் உடலில் படிந்த நச்சுக்கள் வெளியேறும்.


பழ ஸ்ரீகண்ட்
தேவையானவை:


புளிக்காத கெட்டித் தயிர் & 2 கப், பழக்கலவை (ஆப்பிள், பப்பாளி, மாம்பழம், ஆரஞ்சு, வாழைப்பழம்) & 1 கப், சர்க்கரை & தேவையான அளவு, குங்குமப்பூ & ஒரு சிட்டிகை, ஏலக்காய் தூள் & கால் டீஸ்பூன், பால் & 1 டேபிள் ஸ்பூன்.


செய்முறை:

தயிரை, சாதாரண வடிகட்டியில் ஊற்றி தண்ணீரில்லாமல் பிரித்தெடுத்துக் கொள்ளுங்கள். பழங்களை மிகவும் பொடியாக நறுக்குங்கள். வடிகட்டிய தயிரில், சர்க்கரை சேர்த்து, நன்கு கலந்துகொள்ளுங்கள். பாலை சூடாக்கி, குங்குமப்பூவை அதில் ஊறப்போட்டு, கரையுங்கள். தயிர் கலவையில் குங்குமப்பூ, ஏலக்காய்த்தூள், பழங்கள் சேர்த்து நன்கு கலந்து, பூரி, சப்பாத்தியுடன் குழந்தைகளுக்குக் கொடுங்கள்.


ஷைனியின் கமென்ட்...
பாலின் நன்மைகள் மற்றும் பழங்களில் உள்ள புரதம், வைட்டமின், தாதுக்கள், நார்ச்சத்து ஆகியவை
குழந்தைகளின் வயிற்றை சுத்தமாக வைத்துக் கொள்வதில் பெரும்பங்கு வகிக்கின்றன. பால் பிடிக்காத
பிள்ளைகளுக்கு, இதை செய்து கொடுக்கலாம்.

சீஸ் கேரட் சாண்ட்விச்
தேவையானவை:

பிரெட் ஸ்லைஸ் & 10, கேரட் (துருவியது) & 1 கப், சீஸ் (துருவியது) & அரை கப், வெண்ணெய் & 4 டேபிள் ஸ்பூன், பூண்டு & 3 பல், மிளகுத்தூள் & அரை டீஸ்பூன், உப்பு & சிட்டிகை.


செய்முறை:

பிரெட் ஸ்லைஸ்களின் ஓரங்களை நறுக்குங்கள். பூண்டை நசுக்குங்கள். வெண்ணெயை அடுப்பில் வைத்து உருக்கி, அதில் நசுக்கிய பூண்டை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, பின் துருவிய கேரட்டை சேருங்கள். ஐந்து நிமிடங்கள் வதக்கியபின் இறக்கி சீஸ், மிளகுத்தூள், உப்பு சேர்த்து நன்கு கலக்குங்கள்.


ஒரு பிரெட் ஸ்லைஸின்மேல், இந்தக் கலவையில் சிறிதளவைத் தூவி, மற்றொரு ஸ்லைஸால் மூடுங்கள். வெண்ணெய் தடவி, டோஸ்டரில் ரோஸ்ட் செய்யுங்கள். அல்லது, தோசைக்கல்லில் சுட்டெடுங்கள்.


ஷைனியின் கமென்ட்...
இந்த சாண்ட்விச்சிலுள்ள பீட்டா கரோடின்,குழந்தைகளுக்குசருமஆரோக்கியம்மற்றும்தெளிவான பார்வையை தருவதிலும் முக்கிய பங்காற்றுகிறது. சீஸ், வெண்ணெய் ஆகியவற்றில் வைட்டமின் ஏ அதிகம்!

ஓட்ஸ் உப்புமா பால்ஸ்

தேவையானவை:

ஓட்ஸ் & 1 கப், காய்கறி (கேரட், பட்டாணி, பீன்ஸ், கோஸ்) கலவை & 1 கப், பெரிய வெங்காயம் & 1, பச்சை மிளகாய் & 2, மல்லித்தழை & சிறிது, சீஸ் & 2 டேபிள் ஸ்பூன், கார்ன்ஃப்ளார் & கால் கப், பிரெட் தூள் & சிறிதளவு, உப்பு, எண்ணெய் & தேவையான அளவு.




செய்முறை:


வெங்காயம், பச்சை மிளகாயை நறுக்குங்கள். எண்ணெயைக் காயவைத்து வெங்காயம், மிளகாய் சேர்த்து வதக்குங்கள். வதங்கியதும், பொடியாக நறுக்கிய காய்கறி, உப்பு சிறிது சேர்த்து நன்கு வதக்கி, ஒன்றரை கப் தண்ணீர் சேருங்கள். தண்ணீர் நன்கு கொதித்ததும் ஓட்ஸ், துருவிய சீஸ், நறுக்கிய மல்லித்தழை சேர்த்து, நடுத்தர தீயில் ஐந்து நிமிடங்கள் நன்கு கிளறி இறக்குங்கள். ஆறியதும் சிறு உருண்டைகளாக உருட்டுங்கள்.

கார்ன்ஃப்ளாரை நீர்க்கக் கரைத்து, உருண்டைகளை அதில் போட்டு எடுத்து, பிரெட் தூளில் புரட்டி, காயும் எண்ணெயில் பொரித்தெடுங்கள்.


ஷைனியின் கமென்ட்...
கரையக்கூடிய நார்ச்சத்தும் அதிக புரதமும் இதிலுள்ள ஓட்ஸின் சிறப்பம்சங்கள். காய்கறி சேர்ப்பதால், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போனஸாக
குழந்தையின் உடலுக்குக் கிடைக்கின்றன.

டிரை கலர் சாண்ட்விச்

தேவையானவை:

வெண்ணெய் & 50 கிராம், பிரெட் ஸ்லைஸ் & 1 பாக்கெட்.


மூன்று அடுக்குகள் கொண்ட இதன் முதல் அடுக்குக்கு: பீட்ரூட் & 1, பெரிய வெங்காயம் & 1, தக்காளி & 1, காய்ந்த மிளகாய் & 2, தேங்காய்த் துருவல் & 1 டேபிள் ஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு & தலா அரை டீஸ்பூன், உப்பு & தேவையான அளவு, புளி & சிறு துண்டு, எண்ணெய் & 1 டேபிள் ஸ்பூன். இரண்டாவது அடுக்குக்கு: உருளைக் கிழங்கு & 3, தேங்காய்ப்பால் & அரை கப், பச்சை மிளகாய், இஞ்சி விழுது & 1 டீஸ்பூன், உப்பு & தேவைக்கு, எண்ணெய் & 1 டேபிள் ஸ்பூன், எலுமிச்சம்பழச் சாறு & 1 டேபிள் ஸ்பூன். மூன்றாவது அடுக்குக்கு: வேகவைத்த பட்டாணி & 1 கப், புதினா & ஒரு கைப்பிடி அளவு, மல்லித்தழை & ஒரு கைப்பிடி அளவு, பச்சை மிளகாய் & 1, சாட் மசாலா & அரை டீஸ்பூன், எலுமிச்சம்பழச்சாறு & 2 டீஸ்பூன், உப்பு & தேவைக்கு.

செய்முறை:


முதலில் பீட்ரூட்டைக் கழுவித் தோல் சீவுங்கள். வெங்காயம், தக்காளியை நறுக்குங்கள். எண்ணெயைக் காயவைத்து, கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து, பிறகு வெங்காயத்தை சேர்த்து வதக்குங்கள். நன்கு வதங்கிய தும் தக்காளி, பீட்ரூட் துருவல், தேங்காய்த் துருவல் சேர்த்து ஐந்து நிமிடங்கள் வதக்கி, பின்னர் உப்பு, புளி சேர்த்து கிளறி இறக்கி ஆறவிட்டு, நன்கு அரைத்து எடுங்கள். அடுத்ததாக, உருளைக்கிழங்கை வேகவைத்துத் தோலுரித்து மசித்துக் கொள்ளுங்கள். எண்ணெயைக் காயவைத்து இஞ்சி, மிளகாய் விழுது, உருளைக்கிழங்கு, உப்பு, தேங்காய்ப் பால் சேர்த்துக் கெட்டியாகும் வரை கிளறி இறக்குங்கள். எலுமிச்சம்பழச்சாறு ஊற்றி, நன்கு கலந்துகொள்ளுங்கள். இறுதியாக, பட்டாணியை நன்கு மசித்து புதினா, மல்லித்தழையைச் சுத்தம் செய்து பச்சை மிளகாய், எலுமிச்சம்பழச்சாறு, உப்பு சேர்த்து நன்கு அரைத்தெடுங் கள். அதனுடன் மசித்த பட்டாணி, சாட் மசாலா கலந்து வையுங்கள்.

இப்போது பிரெட் ஸ்லைஸின் ஓரங்களை நறுக்கி, ஸ்லைஸின் மேலும் சிறிது வெண்ணெய் தடவுங்கள். ஒரு ஸ்லைஸின் மேல் பீட்ரூட் சட்னியைத் தடவி, மற்றொரு ஸ்லைஸால் மூடி, அதன்மேல் உருளைக்கிழங்கு கலவையைத் தடவுங்கள். அதையும் பிரெட் ஸ்லைஸால் மூடி, பட்டாணிக் கலவையைத் தடவுங்கள். அதன்மேல் மற்றொரு ஸ்லைஸால் மூடி, குறுக்கே வெட்டிப் பரிமாறுங்கள்.






ஷைனியின் கமென்ட்...
மூவர்ணத்தில் கண்கவரும் இந்த சாண்ட்விச்சில்,
குழந்தைகள் சாப்பிடும் உணவை, சக்தியாக மாற்றுவதற்கு தேவையான தாதுக்கள் அடங்கியுள்ளன.

ஃப்ளோட்டிங் பால்ஸ்

தேவையானவை:

உளுந்து & அரை கப், தேங்காய்ப் பால் & 2 கப், பால் & 1 கப், வெல்லம் & 2 கப், ஏலக்காய்த்தூள் & 1 டீஸ்பூன், முந்திரி விழுது & 1 டேபிள் ஸ்பூன், எண்ணெய் & தேவைக்கு.


செய்முறை:

உளுந்தை அரைமணி நேரம் ஊறவிடுங்கள். பாலை நன்கு காய்ச்சி, அதனுடன் முந்திரி விழுதைச் சேர்த்து இறக்குங்கள். வெல்லத்தில் கால் கப் தண்ணீர் சேர்த்து, அடுப்பில் வைத்துக் கரைய விட்டு வடிகட்டுங்கள். பாலுடன் வெல்லக் கரைசல், ஏலக்காய்த் தூள், தேங்காய்ப் பால் சேர்த்துக் கலந்து வையுங்கள். ஊறிய உளுந்தைப் பொங்கப் பொங்க (வடைமாவு பதத்தில்) அரையுங்கள். எண்ணெயைக் காயவைத்து, சிறு போண்டாக்களாகப் பொரித்து, பாலில் போடுங்கள். இளஞ்சூடாகப் பரிமாறுங்கள்.





ஷைனியின் கமென்ட்...
இந்த உளுந்து பால்ஸ், எக்கச்சக்கமாய்ப் புரதச்சத்து நிரம்பிய அற்புத சிற்றுண்டி. குழந்தைகளின் தசை மற்றும் எலும்பு வளர்ச்சிக்கு அவசியமானது, இந்தப் புரதச் சத்துதான்.

தோசை சாண்ட்விச்

தேவையானவை:

தோசை மாவு & 2 கப், உருளைக்கிழங்கு & 2, நறுக்கிய காய்கறிக் கலவை & 1 கப், மிளகாய்த் தூள் & அரை டீஸ்பூன், மல்லித்தழை & சிறிது, பனீர் (துருவியது) & அரை கப், உப்பு, எண்ணெய் & தேவைக்கு.


செய்முறை:

உருளைக்கிழங்கை வேகவைத்துத் தோலுரித்து நன்கு மசியுங்கள். அத்துடன் பொடியாக நறுக்கிய காய்கறிகளை வேகவைத்து சேருங்கள். மிளகாய்த்தூள், மல்லித்தழை, பனீர், உப்பு சேர்த்து நன்கு கலந்துகொள்ளுங்கள். தோசை மாவை சிறு தோசைகளாக ஊற்றி, சுற்றி எண்ணெய் ஊற்றி, நன்கு வேகவிட்டு எடுங்கள்.

ஒரு தோசையின்மேல் சிறிது காய்கறிக் கலவையை வைத்து, மற்றொரு தோசையால் மூடி, சாண்ட்விச் போல் செய்து கொடுங்கள். ‘டிபன் வேண்டாம்’ என்னும் குழந்தைகளும் கேட்டு வாங்கிச் சாப்பிடுவார்கள்.



ஷைனியின் கமென்ட்...
பார்த்தால் சாதாரண தோசைதான். ஆனால், வளர்ச்சிக்குத் தேவையான வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ§ம் புரதச்சத்தும் தாதுக்களும் நிறைந்துள்ள ‘சத்தான’ தோசை இது!

சாக்கோநட் ஸ்லைசஸ்


தேவையானவை: மேரி பிஸ்கெட் & 15, முந்திரி, பாதாம், அக்ரூட், திராட்சை & அரை கப், வெண்ணெய் & கால் கப், கோக்கோ பவுடர் & 1 டேபிள் ஸ்பூன்,கன்டென்ஸ்டு மில்க் & கால் கப், அத்திப்பழம் (பதப்படுத்தியது) & 4,சர்க்கரை & 2 டேபிள் ஸ்பூன்.


செய்முறை:

பிஸ்கெட்டை நன்கு பொடித்துக் கொள்ளுங்கள். முந்திரி, பாதாம், அக்ரூட்டைப் பொடியாக நறுக்குங்கள். பிஸ்கெட் தூளுடன் திராட்சை, கோக்கோ பவுடர், சர்க்கரை, கன்டென்ஸ்டு மில்க், நறுக்கிய பருப்புகள் சேர்த்து நன்கு கலக்குங்கள்.

வெண்ணெயை உருக்கி, சூடாக பிஸ்கெட் கலவையில் சேர்த்துப் பிசையுங்கள். இரண்டு, மூன்று பகுதிகளாகப் பிரித்து, சற்றுக் கனமாக நீளவாக்கில் உருட்டி, ஃப்ரிஜ்ஜில் ஒரு மணி நேரம் வைத்து, ஸ்லைஸ் செய்து பரிமாறுங்கள். சமையல் வேலையே இல்லாத சத்தான உணவு ரெடி!


ஷைனியின் கமென்ட்...
இந்த ஸ்லைஸில் இரும்புச்சத்து, புரதச் சத்து,
வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் இ நிரம்பியுள்ளது. சருமப் பாதுகாப்புக்கும் நோய் எதிர்ப்புச்
சக்தியை வளர்ப்பதற்கும் இவை தேவை.

மினி பிஸ்ஸா

தேவையானவை:

தோசை மாவு & 2 கப், சீஸ் (துருவியது) & அரை கப், மல்லித்தழை & சிறிது, மிளகுத்தூள் & அரை டீஸ்பூன், கேரட் (சிறியது) & 1, குடமிளகாய் (சிறியது) & 1, பெரிய வெங்காயம் & 1, தக்காளி (சிறியது) & 1, எண்ணெய், உப்பு & தேவையான அளவு.


செய்முறை:

கேரட், குடமிளகாய், வெங்காயம், தக்காளி (விதைப் பகுதியை நீக்கிவிடுங்கள்) ஆகியவற்றை மிக மெல்லியதாக நறுக்கி, உப்பு சேர்த்து கலந்து கொள்ளுங்கள். தோசைக்கல்லைக் காயவைத்து, மாவைச் சிறுசிறு தோசைகளாக ஊற்றுங்கள். அதன்மேல் காய்கறிக் கலவை, சிறிது மல்லித்தழை, மிளகுத்தூள், துருவிய சீஸ் தூவி (சுற்றிலும் எண்ணெய் விட்டு) நன்கு வேகவிட்டு எடுங்கள்.

இந்த Ôஹோம் மேட்Õ பிஸ்ஸாவுக்கு குழந்தைகளிடம் ஏகப்பட்ட கிராக்கி இருக்கும், பாருங்கள்!


ஷைனியின் கமென்ட்...
பிஸ்ஸாவில் சேர்க்கும் காய்கறிகளில் அடங்கியுள்ள பீட்டா கரோடினும் சீஸில் உள்ள கால்சியமும் சரும வளர்ச்சிக்கும் பொதுவான வளர்ச்சிக்கும் தேவையான முக்கிய அம்சங்கள்.

அரிசி, மொச்சைப் பருப்பு சாதம்


தேவையானவை:

பச்சரிசி & 1 கப், பச்சை மொச்சை & அரை கப், துவரம்பருப்பு & அரை கப், பெரிய வெங்காயம் & 1, தக்காளி & 2, பச்சை மிளகாய் & 2, தேங்காய்த் துருவல் & 2 டேபிள் ஸ்பூன், இஞ்சி, பூண்டு விழுது & 1 டீஸ்பூன், கடுகு, சீரகம் & தலா அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் & கால் டீஸ்பூன், கறிவேப்பிலை & சிறிது, உப்பு & தேவைக்கு, எண்ணெய் & 2 டேபிள் ஸ்பூன், நெய் & 1 டேபிள் ஸ்பூன்.


செய்முறை:

அரிசியுடன் துவரம்பருப்பு, மஞ்சள்தூள், 4 கப் தண்ணீர், உப்பு சேர்த்து குக்கரில் வைத்து, மூன்று விசில் வந்தபின், சிறு தீயில் ஐந்து நிமிடங்கள் வைத்து இறக்குங்கள். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்குங்கள். பச்சை மிளகாயைக் கீறுங்கள்.


எண்ணெயைக் காயவைத்து கடுகு, சீரகம் தாளித்து, மொச்சையைச் சேர்த்து, இரண்டு நிமிடங்கள் வதக்கி வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்குங்கள்.

வதங்கியதும் தக்காளி, இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து, மொச்சை வேகும் வரை வதக்கி, கடைசியில் தேங்காய்த் துருவல், கறிவேப்பிலை, உப்பு, வேகவைத்த சாதம், நெய் சேர்த்து நன்கு கிளறி இறக்குங்கள்.


ஷைனியின் கமென்ட்...
மாவுச் சத்து எனும் கார்போஹைட்ரேட் (அரிசி),
புரதச் சத்து மற்றும் வைட்டமின்கள் (பருப்பு), நார்ச்சத்து (மொச்சை) ஆகியவை கலந்துள்ள சரிவிகித உணவு இது.

காளான் பஜ்ஜி



தேவையானவை:

பட்டன் காளான் & 15, கடலை மாவு & அரை கப், கார்ன்ஃப்ளார் & 1 டேபிள் ஸ்பூன், அரிசி மாவு & 1 டேபிள் ஸ்பூன், மைதா & 1 டேபிள் ஸ்பூன், சீரகத்தூள், மிளகாய்த் தூள் & தலா 1 டீஸ்பூன், உப்பு, எண்ணெய் & தேவைக்கு.


செய்முறை:

காளானைச் சுத்தம் செய்துகொள்ளுங்கள். எண்ணெய் நீங்கலாக, மற்ற எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து, தேவையான தண்ணீர் சேர்த்து கெட்டியாகக் கரையுங்கள். காளானை ஒவ்வொன்றாக அதில் நனைத்து எடுத்து, காயும் எண்ணெயில் பொரித்துப் பரிமாறுங்கள்.

காலிஃப்ளவரையும் துண்டுகளாக்கி, உப்பு நீரில் சுத்தம் செய்து, அரைவேக்காடாக வேகவைத்து, நீரை வடித்துவிட்டு, இதேபோல் கடலைமாவு கலவையில் நனைத்து, பஜ்ஜி செய்யலாம்.



ஷைனியின் கமென்ட்...
காளானில் உள்ள தாது உப்பும், புரதமும் வளரும் குழந்தைகளின் அத்தியாவசியத் தேவைகளுள் முக்கியமானவை.

டிரை கலர் ரைஸ்

தேவையானவை:

வேகவைத்த சாதம் & 3 கப். முதல் கலருக்கு: தக்காளி & 1, பீட்ரூட் & பாதி, கேரட் & பாதி, மிளகாய்த்தூள் & அரை டீஸ்பூன், கரம் மசாலா & கால் டீஸ்பூன், நெய் &1 டேபிள் ஸ்பூன், உப்பு & தேவைக்கு. இரண்டாவது கலருக்கு: பனீர் (துருவியது) & கால் கப், சீஸ் (துருவியது) & 1 டேபிள் ஸ்பூன், மிளகுத்தூள் & அரை டீஸ்பூன், உப்பு & சிட்டிகை. மூன்றாவது கலருக்கு: புதினா இலை & 15, மல்லித்தழை & சிறிது, பச்சை மிளகாய் & 1, தேங்காய்த் துருவல் & 1 டேபிள் ஸ்பூன், இஞ்சி & 1 துண்டு, பூண்டு & 1 பல், எண்ணெய் அல்லது நெய் & 2 டீஸ்பூன், உப்பு & தேவைக்கு.


செய்முறை:

தக்காளி, பீட்ரூட், கேரட் ஆகியவற்றை மிக்ஸியில் ஒன்றாக அரையுங்கள். நெய்யைக் காயவைத்து, அரைத்த கலவையைச் சேர்த்து, அதனுடன் உப்பு, மிளகாய்த்தூள், கரம் மசாலா சேர்த்து, பச்சை வாசனை போகக் கிளறி, ஒரு கப் சாதத்தை அதனுடன் கலந்துவிடுங்கள். இது முதல் கலர் சாதம்!

இரண்டாவது கலருக்கு, அதற்கென கொடுக்கப்பட்டுள்ள எல்லாவற்றையும் ஒரு கப் சாதத்தில் நன்கு கலந்துவிடுங்கள்.

மூன்றாவது கலருக்கு, கொடுத்துள்ள ஆறு பொருள்களையும் ஒன்றாக, நன்கு அரையுங்கள். நெய்யைக் காயவைத்து, அரைத்த விழுதைச் சேர்த்து, பச்சை வாசனை போக வதக்குங்கள். இதை ஒரு கப் சாதத்தில் போட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்குங்கள். ஒரு சிறிய கிண்ணத்தில் நெய் அல்லது எண்ணெய் தடவி, சிவப்பு கலரில் ஜொலிக்கும் முதல் சாதத்தில் சிறிதளவு எடுத்து பரவினாற்போல போடுங்கள். அதன்மேல், இரண்டாவதாக வெள்ளை சாதம், கடைசியில் பச்சை சாதம் என்று ஒன்றன் மேல் ஒன்றாகப் போட்டு, அழுத்திவிடுங்கள். கிண்ணத்துடன் பத்து நிமிடங்கள் ஆவியில் வைத்தெடுத்து, ஆறவிட்டு, தட்டில் கவிழ்த்துப் பரிமாறுங்கள்.





ஷைனியின் கமென்ட்...
இந்த மூவர்ண சாதம், வைட்டமின்களை வாரி வழங்குவதுடன் கால்சியத்தையும், புரதச் சத்தையும் போனஸாக தருகிறது.

பிஸ்கெட் ட்ரீட்



தேவையானவை:

உப்பு பிஸ்கெட் & 20, வெள்ளரி & பாதி, கேரட் & பாதி, தக்காளி & 1, பனீர் & 100 கிராம், சாட் மசாலா & 1 டீஸ்பூன், உப்பு & சிறிது, ஓமப்பொடி (விருப்பப்பட்டால்) & அரை கப்.


செய்முறை: வெள்ளரி, கேரட், தக்காளி, பனீர் ஆகியவற்றைப் பொடியாக நறுக்குங்கள். அதனுடன் சாட் மசாலா, உப்பு சேர்த்துக் கலக்குங்கள். ஒவ்வொரு பிஸ்கெட்டின் மீதும் இந்தக் கலவையைச் சிறிதளவு பரவினாற்போல் வைத்து (குழந்தைக்குப் பிடிக்கும் என்றால்) ஓமப்பொடி தூவிக் கொடுங்கள்.



ஷைனியின் கமென்ட்...
காய்கறி சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு பச்சை காய்கறிகளின் சத்தைத் தர எளிய வழி இது. விளையாடியபடியே ஒரே வாயில் இந்த சத்து பிஸ்கெட்டுகளை அடக்கிக்கொள்வார்கள்.

துருவல் சிப்ஸ்

தேவையானவை:


உருளைக்கிழங்கு & 1 கிலோ, முந்திரி & 50 கிராம், திராட்சை & 25 கிராம், கார்ன்ஃப்ளேக்ஸ் & 1 கப், கொப்பரை & பாதி, சர்க்கரை & 1 டேபிள் ஸ்பூன், மிளகாய்த்தூள் & 1 டீஸ்பூன், உப்பு, எண்ணெய் & தேவைக்கு.


செய்முறை:

உருளைக்கிழங்கைத் தோல் சீவி, கேரட் துருவியால் துருவிக்கொள்ளுங்கள் (அல்லது) மிக மெல்லியதாக, நீளநீளமாக நறுக்கிக் கொள்ளுங்கள். இரண்டு, மூன்று முறை நன்கு அலசுங்கள். எண்ணெயைக் காயவைத்து, ஒரு கை உருளைக்கிழங்கு துருவலை எடுத்துப் பிழிந்து, எண்ணெயில் போடுங்கள். நன்கு வெந்ததும் எடுங்கள். இதேபோல் எல்லாத் துருவலையும் வறுத்தெடுங்கள்.


தீயைக் குறைத்து, காயும் எண்ணெயில் முந்திரி, திராட்சையைத் தனித்தனியே வறுத்தெடுங்கள். மேலும் சிறிது தீயைக் கூட்டி, எண்ணெய் நன்கு காய்ந்ததும் கார்ன்ஃப்ளேக்ஸைப் போட்டுப் பொரித்தெடுங்கள். கொப்பரையை மெல்லிய துண்டுகளாகச் சீவுங்கள். உருளை, முந்திரி, திராட்சை, கார்ன்ஃப்ளேக்ஸ், கொப்பரை, உப்பு, சர்க்கரை, மிளகாய்த்தூள் எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்தால் துருவல் சிப்ஸ் ரெடி!

இந்த சிப்ஸை ஒருமுறை செய்தால், அப்புறம் எப்போதும் இதற்குத்தான் உங்கள் வீட்டு குழந்தைகளின் ஓட்டு!



ஷைனியின் கமென்ட்...
சுவைக்கு சுவை, சத்துக்கு சத்து இந்த துருவல் சிப்ஸில். கரகர, மொறுமொறுவெனக் கேட்கும் வாண்டுகளுக்கு சரியான நொறுக்குத்தீனி. சக்தி தரும் வைட்டமின்களும் தாது உப்புகளும் அடங்கியிருப்பதால், சந்தோஷமாக சாப்பிடலாம்.

தொகுப்பு: பிரேமா நாராயணன்

படங்கள்: உசேன் மாடல்கள்: சென்னை,
பொன் வித்யாஷ்ரம் பள்ளிக் குழந்தைகள்


Issue Date: 25-02-05

30 நாள்.. 30 குழம்பு

30 நாள்.. 30 குழம்பு
Issue date :16-12-2004

இன்னிக்கு என்ன குழம்பு வெக்கறது?& இது-தான் வாரத்தின் ஏழு நாளும், வருடத்தின் முந்நூற்று அறுபத்தைந்து நாளும் சமையலைப் பொறுத்தவரை இல்லத்தரசிகளின் பெரும் குழப்பம்!

குழப்பத்துக்கு அவசியமே இல்லை.. மாதம் முழுவதும் தினம் ஒரு தினுசாக செய்து ருசிக்க முப்பது விதமான குழம்புகளை செய்முறையோடு சொல்கிறேன் என்று உதவிக்கு வருகிறார் சமையல் கலை நிபுணர் ரேவதி சண்முகம்.

பருப்பு உருண்டைக் குழம்பு   பாசிப் பயறு தண்ணிக் குழம்பு

திடீர் மோர்க் குழம்பு   கட்லெட் குழம்பு

சிவப்பு மோர்க் குழம்பு   வறுத்தரைத்த மிளகுக் குழம்பு

சட்னி மோர்க் குழம்பு   பாகற்காய் பிட்லை
நம் வீட்டு அஞ்சறைப் பெட்டியில் எப்போதும் இருக்கும் அதே சாமான்கள் தான். எதை எதை எதனோடு எந்தளவுக்கு சேர்க்கிறோம் என்பதைப் பொறுத்துதான் புதுப்புது சுவைகளில் வித விதமான ஐட்டங்கள் கிடைக்கின்-றன. சோயா, பனீர் என்று ஃபாஸ்ட் ஃபுட் சமாசார பொருட்களைக் கூட நமது பாரம்பரிய சமையலில் புகுத்தி புதுச்சுவையை உண்டாக்கலாம் என்று ஆச்சரியப்படுத்தும் ரேவதி, சேப்பங்கிழங்கு சாம்பார் முதல் மூலிகை மருந்து குழம்பு வரை வெரைட்டி காட்டி கலக்குகிறார்.

கைப்பக்குவத்தில் பெயரெடுத்தவர்களுக்கு மட்டுமல்ல, சமையலில் அ-னா, ஆ-வன்னாகூட தெரி-யாத புதுப்பெண்களுக்கும் நிச்சயம் மிகப் பயனுள்ளதாக இருக்கும் இந்தக் கையேடு. படித்து.. செய்து.. ருசிங்க. பரி-மாறி குடும்பத்தையும் அசத்துங்க!

பருப்பு உருண்டைக் குழம்பு



தேவை (உருண்டைக்கு); துவரம் பருப்பு, கடலை பருப்பு தலா அரை கப், மிளகாய்வற்றல் 4, சோம்பு அரை டீஸ்-பூன், சின்ன வெங்கா-ம் 15, பூண்டு 10, தேங்காய்த் துருவல் 2 டேபிள் ஸ்பூன், கறிவேப்பிலை, மல்லித்தழை சிறிது, உப்பு தேவைக்கு.


செய்-முறை; பருப்புகளை ஒரு மணி நேரம் தண்-ணீ-ரில் ஊற வைத்து பிறகு தண்ணீரை வடித்துவிட்டு மிளகாய் வற்றல், சோம்பு, சேர்த்து சற்று கர-க-ரப்-பாக அரை-யுங்கள். வெங்காயம், பூண்டு, கறி-வேப்-பிலை, மல்லியை பொடியாக நறுக்கி அரைத்த விழுது தேங்காய்த் துருவல், உப்பு சேர்த்து நன்கு பிசைந்து சிறு உருண்டைகளாக உருட்டி ஆவி-யில் வேக வைத்தோ, எண்ணெயில் பொரித்தோ எடுங்கள்.


குழம்புக்கு; சின்ன வெங்காயம் 1 கப், பூண்டு அரை கப், தக்காளி 2, புளி ஒரு சிறு உருண்டை, மிள-காய்த்-தூள் 4 டீஸ்-பூன், தனியாத்தூள் 2 டீஸ்பூன், மஞ்சள் தூள் கால் டீஸ்-பூன், கடுகு அரை டீஸ்-பூன், வெந்-த-யம் கால் டீஸ்-பூன், சோம்பு கால் டீஸ்-பூன், எண்-ணெய் 4 டேபிள் ஸ்பூன், கறி-வேப்-பிலை சிறிது, தேங்-காய்த்-து-ரு-வல் 2 டேபிள் ஸ்பூன், உப்பு தேவைக்கு.

செய்-முறை; வாண-லி-யில் எண்ணெயை காய வைத்து கடுகு, வெந்-த-யம், சோம்பு தாளித்து தோல் நீக்கிய வெங்-கா-யம், பூண்டை சேர்த்து வதக்-குங்-கள். பின்னர், நறுக்கிய தக்காளி, மிள-காய்த்-தூள், தனி-யாத்-தூள், மஞ்-சள் தூள் சேர்த்து வதக்கி புளி கரை-சல் உப்பு சேர்த்து பச்சை வாடை போக கொதிக்க விடுங்-கள். தேங்-காயை அரைத்து ஊற்றி சிறிது நேரம் கொதிக்-க-விட்டு உருண்-டை-களை சேருங்-கள். மித-மான தீயில் சிறிது நேரம் கொதிக்க விட்டு இறக்-குங்-கள்.


பாசிப் பயறு தண்ணிக் குழம்பு




தேவை; தோலு-டன் முழு பாசிப் பயறு 1 கப், பெ.வெங்-கா-யம் 2, பூண்டு 4 பல், தக்காளி 2, புளி சிறு நெல்லி அளவு, மிள-காய்த்-தூள் 3 டீஸ்-பூன், மல்-லித்-தூள் ஒன்-றரை டீஸ்-பூன், மஞ்-சள் தூள் கால் டீஸ்-பூன், பூண்டு 6 பல், உப்பு தேவைக்கு, எண்-ணெய் 1 டேபிள் ஸ்பூன், கடுகு, உளுந்து தலா அரை டீஸ்-பூன், வெந்-த-யம், சோம்பு தலா கால் டீஸ்-பூன், கறி-வேப்-பிலை சிறி-த-ளவு.

செய்-முறை; பாசிப் பயறை வெறும் வாண-லி-யில் வாசனை வரும்-வரை வறுத்து இரண்டு கப் தண்-ணீர் சேர்த்து வேக வையுங்-கள். வெங்-கா-யம், தக்-கா-ளியை பொடி-யாக நறுக்-குங்-கள். ஒன்-றரை கப் தண்-ணீ-ரில் புளியை கரைத்து வடி-கட்-டுங்-கள். இந்த கரை-ச-லு-டன் பாசிப் பயறு (வேக வைத்த தண்-ணீ-ரு-டன் சேர்த்து), வெங்-கா-யம், தக்காளி மிள-காய்த்-தூள், மஞ்-சள்-தூள் உப்பு சேர்த்து பச்சை வாசனை போக கொதிக்க வையுங்-கள். வாண-லி-யில் எண்-ணெய் ஊற்றி காய வைத்து கடுகு, உளுந்து, வெந்-த-யம், சோம்பு தாளித்து மல்-லித்-தூள் சேர்த்து வதக்கி குழம்-பில் சேருங்-கள். குழம்பை இறக்-கப் போகும்-போது ஒன்-றி-ரண்-டாக நசுக்கிய பூண்டு, கறி-வேப்-பிலை சேர்த்து இறக்-குங்-கள்.


திடீர் மோர்க் குழம்பு



தேவை; லேசாக புளித்த மோர் 1 கப், கடலை மாவு 2 டீஸ்-பூன், கடுகு, உளுந்து, சீர-கம் தலா கால் டீஸ்-பூன், பெருங்-கா-யத்-தூள், மஞ்-சள்-தூள் தலா 1 சிட்-டிகை, மிள-காய் 2, எண்-ணெய் 2 டீஸ்-பூன், கறி-வேப்-பிலை, உப்பு தேவைக்கு.

செய்-முறை; அரை கப் தண்-ணீ-ரில் கடலை மாவு, மோர், உப்பு, மஞ்-சள் தூள் சேர்த்து கட்டி இல்லாமல் கரைத்து வையுங்-கள். மிள-காயை பொடி-யாக நறுக்-குங்-கள். வாண-லி-யில் எண்-ணெய் விட்டு சூடாக்கி கடுகு, உளுந்து, சீர-கம், பெருங்-கா-யம், மிள-காய், கறி-வேப்-பிலை தாளித்து கடலை மாவு கரை-சலை சேர்த்து நன்-றாக கொதிக்க வைத்து இறக்-குங்-கள். காய்-கள் சேர்க்க விரும்-பி-னால் சௌ-சௌ, வெண்டை, பூசணி ஆகி-ய-வற்-றில் ஏதே-னும் ஒன்றை, வதக்கி, தனி-யாக வேக வைத்து சேர்க்-க-லாம்.


கட்லெட் குழம்பு


தேவை (கட்-லெட்-டுக்கு); கடலை மாவு 1 கப், மிள-காய் 4, எண்-ணெய் 2 டேபிள் ஸ்பூன், உப்பு தேவைக்கு, பெ.வெங்-கா-யம் 1, இஞ்சி சிறு துண்டு, பூண்டு 5 பல், மல்-லித்-தழை சிறி-தளவு.

செய்முறை; வெங்-கா-யம், பூண்டு, இஞ்சி, மிள-காய், மல்-லித்-த-ழையை பொடி-யாக நறுக்-குங்-கள். கடலை மாவை கெட்-டி-யாக கரைத்து வையுங்-கள். வாண-லி-யில் எண்-ணெய் விட்டு சூடாக்கி வெங்-கா-யம், சிறி-த-ளவு உப்பு, பூண்டு, இஞ்சி, மிள-காய், மல்-லித்-த-ழையை சேர்த்து வதக்-குங்-கள். பிறகு கடலை மாவு கரை-சலை சேர்த்து கலவை சுருண்டு வரும்-வரை கிளறி இறக்கி ஒரு தட்-டில் கொட்டி சமப்-ப-டுத்-துங்-கள். ஆறி-ய-வு-டன் சிறு துண்-டு-க-ளாக்கி சூடான எண்-ணெ-யில் பொரித்-தெ-டுங்-கள்.

குழம்-புக்கு; பெ.வெங்-கா-யம் 2, தக்காளி 3, புளி சிறு உருண்டை, மிள-காய்த்-தூள் 3 டீஸ்-பூன், தனி-யாத்-தூள் 1 டீஸ்-பூன், எண்-ணெய் 4 ஸ்பூன், உப்பு தேவைக்கு, தேங்-காய் துருவல் 2 டேபிள் ஸ்பூன், கறி-வேப்-பிலை, மல்-லித்-தழை சிறி-த-ளவு, கடுகு, வெந்-த-யம், உளுந்து, சோம்பு தலா அரை டீஸ்-பூன், முந்-திரி 5.

குழம்பு செய்-முறை; வாண-லி-யில் எண்-ணெயை காய வைத்து கடுகு, உளுந்து, வெந்-த-யம், சோம்பு தாளித்து பொடியாக நறுக்கிய வெங்-கா-யம், தக்காளியை வதக்கி 2 கப் நீரில் கரைத்த புளி கரை-சல், மிள-காய்த்-தூள், தனி-யாத்-தூள், உப்பு சேர்த்து கொதிக்-க-வை-யுங்-கள். தேங்-காய்த் துறு-வ-லு-டன் முந்-தி-ரியை சேர்த்து அரைத்து குழம்-பில் ஊற்-றுங்-கள். ஐந்து நிமி-டம் கொதிக்க வைத்து இறக்-குங்-கள். பரி-மா-றும்-போது பொரித்த கட்-லெட்-களை குழம்-பில் சேர்க்க வேண்-டும்.




சிவப்பு மோர்க் குழம்பு



தேவை; புளிக்-காத கெட்-டித் தயிர் 1 கப், பாலாடை கால் கப், கடுகு, வெந்-த-யம் தலா அரை டீஸ்-பூன், மஞ்-சள்-தூள் ஒரு சிட்-டிகை, எண்-ணெய் 2 டீஸ்-பூன், உப்பு, கறி-வேப்-பிலை தேவைக்கு.

அரைக்க; மிள-காய் வற்றல் 3, தனியா 1 டீஸ்-பூன், சீர-கம் அரை டீஸ்-பூன், இஞ்சி சிறு துண்டு, தேங்-காய்த்-து-ரு-வல் 2 டேபிள் ஸ்பூன், கடலை பருப்பு 2 டீஸ்-பூன்

செய்-முறை; அரைக்-கக் கூறி-யுள்ள பொருட்-க-ளில் இஞ்சி, தேங்-காய்த்-து-ரு-வல் நீங்-க-லாக மற்-ற-வற்றை அரை கப் நீரில் அரை மணி நேரம் ஊற-வைத்து பிறகு இஞ்சி, தேங்-காய்த் துரு-வல் சேர்த்து நைஸாக அரைத்-தெ-டுங்-கள். தயி-ரில் உப்பு, மஞ்-சள்-தூள், அரைத்த விழுது சேர்த்து கரைத்து வையுங்-கள். வாண-லி-யில் எண்-ணெ-யைக் காய-வைத்து கடுகு, வெந்-த-யம், கறி-வேப்-பிலை தாளித்து கரைத்து வைத்-துள்ள கரை-சலை ஊற்றி, கொதி வரும்-போது இறக்-கி-வி-டுங்-கள். இறக்-கிய பிறகு பாலா-டையை நன்கு கலக்கி அதில் சேர்த்து பரி-மா-றுங்-கள். காய்-கறி சேர்ப்-ப-தா-னால் (வெண்-டைக்-காய், வெள்ளை பூசணி, சௌ-சௌ) தனி-யாக வதக்கி வேக வைத்து சேர்க்க வேண்-டும்.



வறுத்தரைத்த மிளகுக் குழம்பு



தேவை; சின்ன வெங்-கா-யம் 1 கப், புளி எலு-மிச்சை அளவு, தக்காளி 4, எண்-ணெய் 5 டே.ஸ்பூன், கடுகு, உளுந்து, வெந்-த-யம், சீர-கம் தலா அரை டீஸ்-பூன், உப்பு தேவைக்கு, கறி-வேப்-பிலை சிறிது.

அரைக்க; மிளகு, சீர-கம் தலா 2 டேபிள் ஸ்பூன், உளுந்து, கடலை பருப்பு தலா 2 டீஸ்-பூன், வெந்-த-யம் அரை டீஸ்-பூன், சுக்கு 1 துண்டு, மிள-காய் வற்றல் 4.

செய்-முறை; புளியை அரை கப் தண்-ணீ-ரில் கரைத்து வடி-கட்டி வையுங்-கள். வாண-லி-யில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்-ணெயை காய வைத்து அரைக்கக் கூறியுள்ள பொருட்களை சூடுவர வறுத்து, ஆற-வைத்து கால் கப் தண்-ணீர் சேர்த்து நைஸாக அரை-யுங்-கள். மீத-முள்ள எண்-ணெயை காய-வைத்து கடுகு, உளுந்து, வெந்-த-யம், சீர-கம் தாளித்து வெங்-கா-யம், தக்-கா-ளியை சிறிது உப்பு சேர்த்து வதக்-குங்-கள். அத-னு-டன் புளி கரை-சல், அரைத்த விழுது, தேவை-யான உப்பு சேர்த்து நன்கு கொதிக்க வைத்து கறி-வேப்-பிலை தூவி இறக்-குங்-கள். பூண்டு சேர்க்க விரும்-பி-னால் வெங்-கா-யத்-து-டனேயே சேர்த்து வதக்கிவிட வேண்-டும்.


சட்னி மோர்க் குழம்பு



தேவை; புளிக்-காத கெட்-டித் தயிர் 1 கப், மஞ்-சள் தூள் 1 சிட்-டிகை, எண்-ணெய் 2 டீஸ்-பூன், கடுகு, வெந்-த-யம் தலா கால் டீஸ்-பூன், பெருங்-கா-யத்-தூள், கறி-வேப்-பிலை சிறி-த-ளவு, உப்பு தேவைக்கு.

அரைக்க; தேங்-காய்த் துருவல் 2 டேபிள் ஸ்பூன், பொட்-டுக் கடலை 2 டீஸ்-பூன், மிள-காய் 2.

செய்-முறை; அரைக்கக் கூறி-யுள்ள பொருட்-களை சிறி-த-ளவு தண்-ணீர் சேர்த்து நைஸாக அரை-யுங்-கள். தயி-ரில் அரை கப் தண்-ணீர், அரைத்த விழுது, மஞ்-சள் தூள், உப்பு சேர்த்து கரைத்து வையுங்-கள். வாண-லி-யில் எண்-ணெயை ஊற்றி சூடாக்கி கடுகு, வெந்-த-யம், பெருங்-கா-யத்-தூள், கறி-வேப்-பிலை தாளித்து தயிர் கரை-சலை சேருங்-கள். கை விடா-மல் கிள-றிக்-கொண்டே ஒரு நிமி-டம் கொதிக்க வைத்து இறக்-குங்-கள்.


பாகற்காய் பிட்லை




தேவை; துவ-ரம் பருப்பு 1 கப், பாகற்-காய் 2, தக்காளி 3, பெ.வெங்-கா-யம் 1, மிள-காய் வற்றல் 10, தனியா 1 டேபிள் ஸ்பூன், கடலை பருப்பு அரை டே.ஸ்பூன், சீர-கம் அரை டீஸ்-பூன், தேங்-காய் துருவல் 1 டே.டேபிள் ஸ்பூன், கடுகு, உளுந்து அரை டீஸ்-பூன், புளி நெல்-லிக்-காய் அளவு, பெருங்-கா-யம் சிறி-த-ளவு, மஞ்-சள் தூள் சிறி-த-ளவு, உப்பு தேவைக்கு, கறி-வேப்-பிலை, மல்-லித்-தழை சிறி-த-ளவு, எண்-ணெய் 3 டே.ஸ்பூன்.

செய்-முறை; துவ-ரம் பருப்புடன் மஞ்-சள் தூள், இரண்டு கப் தண்-ணீர் சேர்த்து வேக வையுங்-கள். பாகற்-காயை விரல் நீள துண்-டு-க-ளா-க-வும், வெங்-கா-யம், தக்-கா-ளியை சிறு துண்-டு-க-ளா-க-வும் நறுக்-குங்-கள். புளியை ஒன்-றரை கப் தண்-ணீ-ரில் கரைத்து வடி-கட்-டுங்-கள். வாண-லி-யில் 1 டே.ஸ்பூன் எண்-ணெயை சூடாக்கி, கடலை பருப்பு, சீர-கம், மிள-காய் வற்றல், தனியா, தேங்-காயை மித-மான தீயில் சிவக்க வறுத்து ஆற-வைத்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரை-யுங்-கள். மீதமுள்ள எண்-ணெயை காய வைத்து கடுகு, உளுந்து தாளித்து பாகற்-காயை சேருங்-கள். காய் நன்கு வதங்-கி-ய-தும் வெங்-கா-யம் சேர்த்து வதக்கி புளி கரை-சல், பெருங்-கா-யம், தக்காளி, உப்பு, கறி-வேப்-பிலை சேர்த்து பச்சை வாசனை போக கொதிக்க விட்டு அரைத்து வைத்-துள்ள விழு-தை-யும், வேக வைத்த பருப்-பை-யும் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க வைத்து மல்-லித்-தழை தூவி இறக்-குங்-கள்.


மொச்சைக்கொட்டைக் குழம்பு


தேவை; காய்ந்த மொச்சை 1 கப், புளி எலு-மிச்சை அளவு, சின்ன வெங்-கா-யம் அரை கப், பூண்டு கால் கப், தக்காளி 4, மிள-காய்த்-தூள் 3 டீஸ்-பூன், மல்-லித்-தூள் 2 டீஸ்-பூன், மஞ்-சள் தூள் கால் டீஸ்-பூன், எண்-ணெய் கால் கப், கடுகு, உளுந்து, வெந்-த-யம், சீர-கம், சோம்பு தலா கால் டீஸ்-பூன், உப்பு தேவைக்கு, கறி-வேப்-பிலை சிறி-த-ளவு.

செய்-முறை; மொச்சை பயறை வெறும் வாண-லி-யில் சூடு வர வறுத்து ஒன்-றரை கப் தண்-ணீர் சேர்த்து நன்கு வேக வையுங்-கள். (முந்தின நாளே ஊற வைத்து, வறுக்-கா-ம-லும் வேக வைக்-க-லாம்) வெந்-த-தும் அந்த நீரை வடிகட்டி அத-னு-டன் மேலும் அரை கப் நீர் சேர்த்து புளியை கரைத்து வடி-கட்-டுங்-கள். பூண்டு, வெங்-கா-யத்-தின் தோலை நீக்கி வையுங்-கள். தக்-கா-ளியை பொடி-யாக நறுக்-குங்-கள். வாண-லி-யில் எண்-ணெயை காய வைத்து கடுகு, உளுந்து, வெந்-த-யம், சீர-கம், சோம்பு தாளித்து, பூண்டு, வெங்-கா-யம் சேர்த்து வதக்-குங்-கள். பிறகு தக்காளி சேர்த்து வதக்கி கடை-சி-யாக புளி-க்க-ரை-சல், மிள-காய்த்-தூள், மல்-லித்-தூள், மஞ்-சள் தூள், வேக வைத்த மொச்சை, உப்பு சேர்த்து கொதிக்க வையுங்-கள். பச்சை வாடை நீங்கி குழம்பு கெட்-டி-யா-ன-தும் கறி-வேப்-பிலை தூவி இறக்-குங்-கள்.


பகோடா குழம்பு


தேவை (பகோ-டா-வுக்கு); கடலை மாவு அரை கப், பெரிய வெங்-கா-யம் 1, மிள-காய் 1, கறி-வேப்-பிலை, மல்-லித்-தழை சிறி-த-ளவு, சோம்பு கால் டீஸ்-பூன், இஞ்சி பூண்டு (ஒன்-றி-ரண்-டாக நசுக்-கி-யது) அரை டீஸ்-பூன், எண்-ணெய் பொரிக்-கத் தேவை-யான அளவு, உப்பு தேவைக்கு.

செய்-முறை; வெங்-கா-யம், மிள-காய், கறி-வேப்-பிலை, மல்-லித்-த-ழையை பொடி-யாக நறுக்கி அத-னு-டன் கடலை மாவு, இஞ்சி, பூண்டு, சோம்பு, உப்பு, ஒரு கரண்டி சூடான எண்-ணெய் ஆகி-ய-வற்றை சேர்த்து சிறி-த-ளவு தண்-ணீர் தெளித்து பிசறி வையுங்-கள். வாண-லி-யில் எண்-ணெய்விட்டு சூடாக்கி கடலை மாவு கல-வையை கொஞ்-சம் கொஞ்-ச-மாக போட்டு பொரித்-தெ-டுங்-கள்.

குழம்-புக்கு; பெரிய வெங்-கா-யம் 2, தக்காளி 4, இஞ்சி பூண்டு விழுது 1 டீஸ்-பூன், மிள-காய்த்-தூள் 3 டீஸ்-பூன், மல்-லித்-தூள் 1 டீஸ்-பூன், புளி நெல்-லிக்-காய் அளவு, உப்பு தேவைக்கு, வெந்-த-யம், சீர-கம் தலா கால் டீஸ்-பூன், பட்டை 1. எண்-ணெய் 3 டேபிள் ஸ்பூன்.


அரைக்க; தேங்-காய்த் துரு-வல் 2 ஸ்பூன், பொட்-டுக்-க-டலை 2 டீஸ்-பூன்

செய்-முறை; அரைக்க கூறியுள்ளவற்றை நைஸாக அரைத்-தெ-டுங்-கள். வாண-லி-யில் எண்-ணெய் ஊற்றி சூடாக்கி வெந்-த-யம், சீர-கம், பட்டை தாளித்து பொடியாக நறுக்கிய வெங்-கா-யம், தக்-கா-ளியை வதக்கி, 2 கப் நீரில் கரைத்த புளி கரை-சல், மிள-காய்த்-தூள், மல்-லித்-தூள், உப்பு சேருங்-கள். பச்சை வாடை போக கொதித்-த-தும் தேங்-காய் விழுது சேர்த்து சிறிது நேரம் கொதிக்க வைத்து இறக்-குங்-கள். பரி-மா-று-வ-தற்கு சற்று முன்பு பகோ-டாக்-களை அதில் போட்டு பரி-மா-றுங்-கள்.



ஆந்திரா புளிக் குழம்பு


தேவை; வெண்-டைக்-காய் 150 கிராம், பெரிய வெங்-கா-யம் 2, மிள-காய் 4, தக்காளி (பெரி-யது) 5, புளி எலு-மிச்சை அளவு, மிள-காய்த்-தூள் 1 டீஸ்-பூன், எண்-ணெய் 4 டேபிள் ஸ்பூன், உப்பு தேவைக்கு, கறி-வேப்-பிலை சிறி-த-ளவு.



செய்-முறை; வெண்-டைக்-காயை சுத்தம் செய்து ஒரு அங்-குல துண்-டு-க-ளா-க-வும், வெங்-கா-யத்தை நீள நீள-மா-க-வும், தக்-கா-ளியை பொடி-யா-க-வும் நறுக்-குங்-கள். மிள-காயை இரண்-டாக கீறி வையுங்-கள். புளியை இரண்டு கப் தண்-ணீ-ரில் கரைத்து வையுங்-கள். வாண-லி-யில் எண்-ணெயை காய வைத்து வெங்-கா-யம், மிள-காய் சேர்த்து வதக்-குங்-கள். பிறகு தீயை மித-மாக்கி, வெண்-டைக்-காய் சேர்த்து வதக்-குங்-கள். காய் நன்கு வதங்-கி-ய-தும் தக்காளி, மிள-காய்த்-தூளை சேர்த்து தக்காளி மசி-யும் வரை வதக்கி புளி கரை-சல், உப்பு சேர்த்து சிறிது நேரம் கொதிக்க வைத்து கறி-வேப்-பிலை தூவி இறக்-குங்-கள்.


பனீர் மசாலாக் குழம்பு


தேவை; பனீர் கால் கிலோ, பெரிய வெங்-கா-யம் 2, தக்காளி 4, எண்-ணெய் 3 டேபிள் ஸ்பூன் மற்-றும் பனீர் பொரிக்-கத் தேவை-யான அளவு, பட்டை, பிரிஞ்சி இலை தலா 1,

அரைக்க; தேங்-காய்த் துரு-வல் 2 டேபிள் ஸ்பூன், முந்-திரி 12, இஞ்சி 1 துண்டு, பூண்டு 8 பல், மிள-காய்த் தூள் 2 டீஸ்-பூன், மல்-லித்-தூள் 1 டீஸ்-பூன், சோம்பு 1 டீஸ்-பூன், பட்டை, லவங்-கம், ஏலக்-காய் தலா 1.

செய்-முறை; அரைக்-கக் கூறி-யுள்ள சாமான்-களை ஒன்-றா-கச் சேர்த்து சிறி-த-ளவு தண்-ணீர் விட்டு நைஸாக அரைத்-தெ-டுங்-கள். வெங்-கா-யம், தக்-கா-ளியை பொடி-யாக நறுக்-குங்-கள். பனீரை சிறு துண்-டு-க-ளாக நறுக்-குங்-கள். வாண-லி-யில் மூன்று ஸ்பூன் எண்ணெயை காய வைத்து பட்டை, பிரிஞ்சி இலையை தாளி-யுங்-கள். பிறகு வெங்-கா-யம், தக்-கா-ளியை ஒன்-றன்-பின் ஒன்-றாக சேர்த்து வதக்கி, அரைத்த விழுதை சேர்த்து பச்சை வாடை போக வதக்கி, ஒன்-றரை கப் தண்-ணீர், உப்பு சேர்த்து கொதிக்க வையுங்-கள். வாண-லி-யில் எண்-ணெயை ஊற்றி சூடாக்கி பனீர் துண்-டங்-களை பொன்-னி-ற-மாக பொரித்-தெ-டுங்-கள். பொரித்-த-வற்றை குழம்-பில் சேர்த்து மேலும் ஐந்து நிமி-டங்-கள் கொதிக்க வைத்து இறக்-குங்-கள்.


மருந்துக் குழம்பு


தேவை; சின்ன வெங்-கா-யம் 1 கப், பூண்டு அரை கப், தக்காளி 3, புளி எலு-மிச்சை அளவு, கறி-வேப்-பிலை, மல்-லித்-தழை, உப்பு தேவைக்கு.

அரைக்க; மிளகு 3 டீஸ்-பூன், சீர-கம் 2 டீஸ்-பூன், கண்-ட-திப்-பிலி 2 சிறிய குச்சி, சுக்கு விரல் நீளத் துண்டு, வால்-மி-ளகு அரை டீஸ்-பூன், அரிசி திப்-பிலி சிறி-த-ளவு, வெந்-த-யம் அரை டீஸ்-பூன், தனியா 3 டீஸ்-பூன்.

தாளிக்க; எண்-ணெய் 4 டேபிள் ஸ்பூன், கடுகு 1 டீஸ்-பூன், உளுந்து 1 டீஸ்-பூன், வெந்-த-யம் அரை டீஸ்-பூன், சீர-கம் அரை டீஸ்-பூன்.


செய்-முறை; அரைக்-கக் கூறி-யுள்ள பொருட்-களை வெறும் வாண-லி-யில் சூடு-வர வறுத்து நைஸாக அரை-யுங்-கள். பூண்டு, வெங்-கா-யத்தை இரண்-டி-ரண்-டாக நறுக்-குங்-கள். புளியை இரண்டு கப் தண்-ணீ-ரில் கரைத்து வடி-கட்-டுங்-கள். இந்த நீரு-டன் தக்காளி, கறி-வேப்-பிலை, மல்-லித்-தழை, சிறி-த-ளவு உப்பு சேர்த்து கரைத்-தெ-டுங்-கள். வாண-லி-யில் எண்-ணெய் ஊற்றி காய-வைத்து கடுகு, உளுந்து, சீர-கம், வெந்-த-யம் தாளித்து பூண்டு, வெங்-கா-யம் சேர்த்து வதக்-குங்-கள். வதங்-கி-ய-தும் புளி கரை-சலை ஊற்றி ஐந்து நிமி-டம் கொதிக்க வைத்து அரைத்து வைத்-துள்ள பொடியை தூவுங்-கள். கிளறி இரண்டு நிமி-டம் கொதிக்க வைத்து இறக்-குங்-கள்.

சளி, அஜீரணத்துக்கு நல்மருந்து இந்தக் குழம்பு.


அரைத்துவிட்ட சாம்பார்


தேவை; துவ-ரம்-ப-ருப்பு 1 கப், வெண்டை அல்லது வேறு ஏதே-னும் காய் 150 கிராம், பெரிய வெங்-கா-யம் 1, தக்காளி 2, மிள-காய் வற்றல் 8, தனியா 1 டேபிள் ஸ்பூன், கடலை பருப்பு அரை டே.ஸ்பூன், வெந்-த-யம், சீர-கம் அரை டீஸ்-பூன், தேங்-காய் துருவல் 1 டே.ஸ்பூன், எண்-ணெய் 4 டீஸ்-பூன், புளி நெல்-லிக்-காய் அளவு, பெருங்-கா-யம் சிறிது, மஞ்-சள் தூள் சிறிது, உப்பு தேவைக்கு, கறி-வேப்-பிலை, மல்-லித்-தழை சிறி-த-ளவு, கடுகு, உளுந்து தலா அரை டீஸ்-பூன்.


செய்-முறை; துவ-ரம் பருப்பை மஞ்-சள் தூள், இரண்டு கப் தண்-ணீர் சேர்த்து குழைய வேக வையுங்-கள். வெங்-கா-யம், தக்காளி, காய்-களை சுத்தம் செய்து நறுக்-குங்-கள். வாண-லி-யில் 2 டீஸ்-பூன் எண்-ணெய் விட்டு மித-மான தீயில் மிள-காய் வற்றல், தனியா, கடலை பருப்பு, வெந்-த-யம், சீர-கம், தேங்-காய்த்-து-ரு-வல் ஆகி-ய-வற்றை பொன்-னி-ற-மாக வறுத்து ஆற வைத்து அரை-யுங்-கள். புளியை ஒன்-றரை கப் தண்-ணீ-ரில் கரைத்து வடி-கட்டி அத-னு-டன் பெருங்-கா-யம், கறி-வேப்-பிலை, உப்பு, வெங்-கா-யம், தக்காளி சேர்த்து கொதிக்க வையுங்-கள். கொதிக்க ஆரம்-பித்-த-தும் காய்-களை சேர்த்து வெந்-த-தும் பருப்பு கரை-சல், அரைத்த விழுதை சேர்த்து கொதிக்க வைத்து இறக்-குங்-கள். வாண-லி-யில் 2 டீஸ்-பூன் எண்-ணெய் விட்டு காய்ந்-த-தும் கடுகு, உளுந்து தாளித்து சேர்த்து, கறி-வேப்-பிலை, மலித்-தழை தூவி பரி-மா-றுங்-கள்.